களிமண்ணில் கலைநயம்: ரக்‌ஷிதா..தேவயானி என பலருக்கும் இவங்க நகைகள்தான் ஃபேவரைட்..

ஒபுஉஷா செந்தில்.

இவரின் கை வண்ணத்தின் சிறப்பு என்னவெனில் அவரின் தனித்துவமான பிரைடல் கலெக்‌ஷன்கள்தான்.களிமண்ணால் செய்தது என சற்றும் கண்டுபிடிக்க முடியாதபடி அவரின் வேலைபாடுகள் இருக்கும்.

  • Share this:
வீட்டிற்காக காய்கறி வாங்கிவிட்டு வந்து கொண்டிருந்த போது களிமண்ணில் செய்யப்படும் டெரகோட்டா நகைகளைப் பார்க்கிறார். பார்த்ததும் வாங்க வேண்டும் என்று ஆசை. விலையை கேட்டதும் அதிக விலை.. பட்ஜட்டிற்கு ஏற்றதாக இல்லை என வீடு திரும்புகிறார். சில நாட்கள் கழித்து செய்தித்தாளில் அதே டெரகோட்டா நகைகளுக்கான பயிற்சி வகுப்பு எடுக்கப்படும் என்ற விளம்பரத்தை பார்க்கிறார்.

அப்படி என்ன அதில் வேலைப்பாடு உள்ளது? ஒரு கை பார்த்துவிடுவோம் என பயிற்சிக்குச் சென்றவர்தான். இன்று பலருக்கும் பிடித்த டிசைன்களில் நகைகளை வடிவமைத்து அசத்திக்கொண்டிருக்கிறார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த தொழில்முணைவோர் ஓபு உஷா செந்தில்.

"அன்று நான் ஒரு நகைக்காக ஆசைப்பட்டேன். இன்று எனக்கு பிடித்த டிசைன்களை நானே வடிவமைத்து அணிந்துகொள்கிறேன் "என மகிழ்ச்சியுடன் பேசுகிறார் ஓபு உஷா.

"ஆரம்பத்தில் இந்த முயற்சி பெரிதாக கை கொடுக்கவில்லை. பயிற்சிக்காக சென்ற இடத்திலும் முழுமையாக கற்றுக்கொடுக்கவில்லை. பின் நானே ஒவ்வொரு விஷயமாகக் கற்றுக்கொண்டேன். அதன் நுணுக்கங்கள் அனைத்தையும் என் சொந்த முயற்சி மற்றும் தேடல்கள் வழியாகவே கற்றுக்கொண்டேன்" என நெகிழ்ச்சியாக பேசுகிறார் ஓபு உஷாவெளி உலகத்தை காட்டாத தந்தை. கல்லூரி படிப்பின் பாதியிலேயே திருமணம். என்னடா வாழ்க்கை என இருந்தவருக்கு திருமணம்தான் அவருக்கான திருப்புமுணையாக அமைந்திருக்கிறது. ”நான் இதை முயற்சி செய்து பார்க்கலாமா என தயக்கத்துடன் இருந்த போதுதான் என் கணவர்  உற்சாகம் அளித்து உறுதுணையாக நின்றார்.  அதோடு என் மாமியாரும் மிகப்பெரிய பக்கபலம். வீட்டையும் , 2 குழந்தைகளையும் நான் பார்த்துகொள்கிறேன். நீ உன் வேலையில் முழு மூச்சாய் இரு என கூறினார்" என்கிறார்.

"இன்று 6 பெண்கள் என்னிடம் வேலை செய்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 20 முதல் 30 ஆர்டர்கள் வருகின்றன.இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேஷியா, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. அதோடு என்னிடம் கேட்பவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.

குழந்தை சாப்பிட அடம்பிடிக்குதா..? பசியைத் தூண்டிவிட அம்மாக்கள் என்ன செய்யலாம்..?

சினிமா பிரபலங்களும் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துவிட்டு என்னை தொடர்பு கொண்டு ஆர்டர் அளிக்கின்றனர். அப்படி சரவணன் மீனாட்சி பிரபலம் ரக்‌ஷிதா, தேவயானி, இயக்குநர் கே.எஸ் ரவிகுமாரின் மகள் மாலிகா , பிக்பாஸ் புகழ் சுஜா வருணி என பல நடிகைகள் என் நகைகளை தொடர்ந்து வாங்கி வருகின்றனர். சீரியல் நடிகைகள் பலர் சீரியலுக்காக நகைகள் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள்" என தன் வளர்ச்சியை பற்றி பெருமிதத்துடன் பேசுகிறார்.உங்களுக்கு இதில் இருக்கும் சவால் என்ன என்று கேட்ட போது "வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதுதான் பெரும் சவால். களிமண்ணில் செய்தது என்பதால் பத்திரமாக உடையாமல் அவர்களுக்கு சென்று சேர வேண்டும். எனவே வடிக்கையாளர் நல்லபடியாக வந்துள்ளது என பதில் அனுப்பும் வரை படபடப்பாகவே இருக்கும்" என கூறுகிறார்.

இவரின் கை வண்ணத்தின் சிறப்பு என்னவெனில் அவரின் தனித்துவமான பிரைடல் கலெக்‌ஷன்கள்தான். மெட்டல் உலோகங்களால் அணியப்படும் பிரைடல் நகைகளுக்கு மத்தியில் பாரம்பரிய முறையில் டெரக்கோட்டாவிலும் பிரைடல் நகைகள் செய்யலாம் என அசத்தியுள்ளார். அவை பார்ப்பதற்கு களிமண்ணால் செய்தது என சற்றும் கண்டுபிடிக்க முடியாதபடி அவரின் வேலைபாடுகள் இருக்கும்.

கணவன் மனைவி தனி படுக்கைகளில் தூங்கினால் உறவு நீண்ட காலம் நீடிக்குமா?

அதுமட்டுமன்றி வண்ணங்களை தேர்வு செய்வதிலும் இவருடைய திறமை தனித்துவம்தான். இதற்குக் காரணம் அவருடைய தந்தை நெசவாளர் என்பதால் வண்ணங்களின் கலவையை சிறு வயதிலிருந்தே பார்த்து பார்த்து அதில் ஆர்வம் வந்ததாகக் கூறுகிறார் . அதனாலேயே பெண்கள் தங்கள் ஆடைக்கு மேட்சிங் அணிகலன்கள் வேண்டுமென்றால் ஒபு உஷாவை தொடர்புகொள்கின்றனர்.அதோடு கஸ்டமைஸ்டு முறையில் வாடிக்கையாளர்கள் எந்த நகையை காண்பித்து இந்த டிசைன் வேண்டும் என்று கேட்டாலும் அதை டெரகோட்ட ஸ்டைலில் தத்ரூபமாக வடிவமைத்து தருவார்.

இப்படியான தனித்துவ திறமைகளால்தான் 2018 ஆண்டு இந்திய தொழில்முணைவோர் விருது, இளம் பெண்களுக்கான தொழில் முனைவோர் விருது 2019 , 2019 சாதனையாளர் விருது, தென்னிந்திய பெண்களுக்கான சாதனையாளர் விருது 2019 என பல விருதுகளுக்கு சொந்தக்காரராக ஜொலிக்கிறார்.

இவ்வளவு சாதனைகளை கடந்த பின்பும் உங்களுடைய தன்னம்பிக்கை எது என்று கேட்டதற்கு என்னுடைய தீராத தேடல்தான் என புன்னகைக்கிறார் ஒபு உஷா செந்தில்.

 
Published by:Sivaranjani E
First published: