• HOME
  • »
  • NEWS
  • »
  • women
  • »
  • Indian Bride | ”இப்படிதான் இருக்கவேண்டும் என்ற வரையறை…” திருமணத்தின் போது இந்திய மணப்பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள்!

Indian Bride | ”இப்படிதான் இருக்கவேண்டும் என்ற வரையறை…” திருமணத்தின் போது இந்திய மணப்பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள்!

விருந்தினர்களுக்கு மணப்பெண் அலங்கார உடையில் இருப்பது அழகாக தெரிந்தாலும், அணிந்திருக்கும் மணப்பெண்ணுக்கே தெரியும் அதனுடைய சிரமங்கள்.

  • Share this:
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணங்கள் பாரம்பரியத்தையும், ஆடம்பரத்தையும் கொண்டவையாக இருக்கின்றன. அந்த நாளில் மணமகனும், மணமகளும் பல்வேறு சடங்கு சம்பரதாயங்களை செய்ய வேண்டியிருக்கும். அனைவரது பார்வையும் அவர்கள் மேல் இருக்கும் என்பதால், எந்தவொரு இடத்திலும் தவறு நடந்துவிடக்கூடாது என்ற படபடப்பு தம்பதிகளுக்குள் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு ஆண்களைவிட கூடுதல் சடங்குகள் இருக்கும். அவ்வாறு காலம்காலமாக இருக்கும் திருமண சடங்குகளில் என்னவெல்லாம் புதியதை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

திருமண உடை:

திருமண நாளன்று பெண்கள் பாரம்பரிய உடை அல்லது விலையுயர்ந்த பட்டு புடவைகளுடன், ஆபரணங்களையும் அணிந்திருப்பார்கள். விருந்தினர்களுக்கு மணப்பெண் அலங்கார உடையில் இருப்பது அழகாக தெரிந்தாலும், அணிந்திருக்கும் மணப்பெண்ணுக்கே தெரியும் அதனுடைய சிரமங்கள். நெருடல் இல்லாத வகையில் உடுத்துவதற்கு ஏற்ற அளவிலான உடையை அணிய விரும்புவது குறித்து பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும். அவர்களுக்கு விருப்பமான உடையை அணிந்து கொள்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும்.

புரோகிதர்கள்:

திருமணம் நடத்தி வைப்பதில் புரோகிதர்கள் மட்டுமே இருப்பதை காலம்காலமாக பார்த்து வருகிறோம். ஆனால் ஆண் புரோகிதர்களுக்கு இணையாக பெண்களும் மந்திரம் ஓதுவதிலும், சமய சடங்குகள் மாறாமல் திருமணம் போன்ற விழாக்கள் நடத்தி வைப்பதில் தேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களையும் திருமணம் நடத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். ஆண் புரோகிதர்கள் மட்டுமே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை.

கொண்டாட்டம்:

திருமண நாளில் பள்ளிக் கல்லூரி நண்பர்களின் வருகையின்போது மணப்பெண் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். நடனம், பாடுவது போன்ற கொண்டாட்டத்திலும் ஈடுபடுவார்கள். அப்போது, அங்கிருக்கும் உறவினர்கள் மணப்பெண் என்றால் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். இப்போதைய காலகட்டத்தில் அந்த அறிவுறுத்தல்கள் தேவையில்லை. மற்றவர்களைவிடவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர் மணப்பெண் என்பதால், அவர்களின் விருப்பம்போல் பாடுவதற்கும், ஆடுவதற்கும் தடை விதிக்கக்கூடாது.

மணப்பெண் அழுகை:

திருமணம் முடிந்தபிறகு மணமகன் வீட்டிற்கு வழியனுப்பி வைக்கும் பெற்றோரைப் பார்த்து மணமகள் கண்ணீர்விட்டு அழுவார். அப்போது உறவினர்களும், பெற்றோர்களும் தேம்பித் தேம்பி அழுவார்கள். இந்த அழுகையை தவிர்க்கலாம். நிச்சயமாக மணமகன் மகிழ்ச்சியோடு வைத்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்கலாம். மணப்பெண்ணும் பெற்றோர் அழ வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமண நாளில் வெட்கம் ஏன்?

திருமண நாளில் மணப்பெண் வெட்கப்பட வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மணமகனுடன் ஜாலியாகக் கூட பேசிக் கொள்ளமாட்டார்கள். ஆனால், உண்மையில் அப்படி இருக்கத் தேவையில்லை. சகஜமாக அனைவருடனும் கலந்துரையாடலாம். மகிழ்ச்சியாக பேசலாம். முன்பு இருந்த நடைமுறைகள் என சொல்லிக்கொடுக்கப்பட்டதை தவிர்த்துவிட்டு, மணப்பெண்கள் அவர்களின் விருப்பம்போல் இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: