• HOME
 • »
 • NEWS
 • »
 • women
 • »
 • குடும்பப்பெண்ணாக இருந்து இப்போது விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் சாதனை பெண்ணாக உருவெடுத்த மஞ்சு தேவி: யார் இவர்?

குடும்பப்பெண்ணாக இருந்து இப்போது விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் சாதனை பெண்ணாக உருவெடுத்த மஞ்சு தேவி: யார் இவர்?

manju devi

manju devi

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் வசிப்பவர், மஞ்சு. தனது தோழிகளை போலவே மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர் இவர். இதனால், ஆசிரியராக வேண்டும் என்ற தனது கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி வீட்டு பெரியோர்களால் கட்டாயப்படுத்தபட்டார்.

 • Share this:
  இந்தியாவின் கிராமப்புறங்களில் பெண்கள் அதிகாரம் பெறுவது எப்போதுமே ஒரு முக்கிய செய்திதான். பலவித கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், எதிர்ப்புகள் என பலவும் இருக்கும் கிராமப்புறத்தில் ஒருவர் சாதிப்பது குறிப்பாக பெண்கள் சாதிப்பது உண்மையில் பெரிய விஷயம் தான். அந்த வகையில் இதெல்லாம் பெண்களால் செய்ய முடியாது ஆண்களால் மட்டும் செய்ய முடியும் என்ற பல வேலைகளில் முக்கியமான ஒன்றை பீகாரை சேர்ந்த மஞ்சு தேவி முறியடித்து சாதனைப் படைத்து வருகிறார்.

  பீகாரின் முங்கர் மாவட்டத்தில் வசிப்பவர், மஞ்சு. தனது தோழிகளை போலவே மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர் இவர். இதனால், ஆசிரியராக வேண்டும் என்ற தனது கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி வீட்டு பெரியோர்களால் கட்டாயப்படுத்தபட்டார். குடும்ப வாழ்க்கை மஞ்சு தேவியின் மையமாக மாறியது. ஆனால், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சில உறுப்பினர்களுடனான ஒரு மீட்டிங் மஞ்சுவின் வாழ்க்கையை மாற்றியது.

  அவரது கிராமமான முடேரியில், ஆக்ஸ்பாம் இந்தியா மற்றும் சேவா பாரத் (Oxfam India and SEWA Bharat) ஆகிய நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கிராமத்தில் உள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். "புதிய மற்றும் மேம்பட்ட விவசாய நுட்பங்களுடன் சிறந்த உற்பத்தித்திறனுக்காக பெண் விவசாயிகளுக்கு பயிற்சி" என்ற யோசனையுடன் நிறுவனத்தை சார்ந்தவர்கள் மக்களிடம் பேசினர். மஞ்சு தனக்கிருந்த கூச்சத்தை விட்டு அந்த குழு உறுப்பினர்களிடம் பேசினாள். மஞ்சுவின் கேள்விகளுக்கு குழுவினர் பதிலளித்து வந்த நிலையில், தங்கள் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்கும்படி மஞ்சுவிடம் கூறினார்கள். வீட்டிலுள்ளவர்களின் சம்மந்தத்துடன் 2016 ஆம் ஆண்டில், மஞ்சு இறுதியாக குழுவில் சேர முடிவு செய்தார். ஒரு விவசாயியாக வேலை செய்யத் தொடங்கிய முதல் ஆண்டில் மஞ்சு பல வெற்றிகளை பெற்றார். ஒரு புதிய நுட்பத்துடன் தக்காளியை பயிரிடுவதன் மூலம் ரூ .15,000 சம்பாதித்தார்.

  எளிய கிராமத்து பெண்ணுக்கு சுதந்திரம் மற்றும் பெருமை ஆகியவற்றைக் கொடுப்பதில் அந்த வெற்றி ஒரு முக்கியமான படியாக அமைந்தது. அவரது பணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மஞ்சு விரைவில் "ஜீவிகா- பீகார் கிராமிய வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்தின்" சமூக அணிதிரட்டும் நபராக மாறியதுடன், விவசாயம் தொடர்பாக உள்ளூர் மக்களுக்கும் உதவத் தொடங்கினார்.

  மஞ்சுவின் வெற்றிக் கதை ஊரெல்லாம் கேட்கத்தொடங்கியது. மஞ்சு தனக்காக சொந்த நிலத்தை கூட வாங்கினார். இப்போது அவர் ஆண்டுக்கு ரூ .60,000 முதல் ரூ.80,000 வரை லாபம் ஈட்டுகிறார். தன்னை போல புதிய புதுமையான மற்றும் லாபம் தரக்கூடிய விவசாய முறைகளை அனைவரும் பின்பற்ற மஞ்ச தேவி பல பெண்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் ஒரு கருவியாக இருந்து வருகிறார். SEWA பாரத் மற்றும் ஆக்ஸ்பாம் இந்தியாவால் தொடங்கப்பட்ட கர்ன்பூமி உழவர் தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு (The Karnbhoomi Farmer Producer Company) ஒரு தலைவர் தேவைப்பட்ட பட்சத்தில், மஞ்சுவின் அனுபவமும் வெற்றியும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் (Farmers Producer Company (FPC)) தலைவராக அவரை மாற்றியது.

  மஞ்சுவின் கடின உழைப்பும், விவசாயத்தின் மீதான அர்ப்பணிப்பும் கிராமவாசிகள் மஞ்சுவிடம் விதை தேர்வு, எந்த பயிரை எப்போது நடுவது, மண் தேர்வு போன்ற பலவகையான பயிர்கள் சார்ந்த கேள்விகளுக்கு ஆலோசனை பெற்று வருகின்றனர். மஞ்சு உண்மையில் விற்பனையாளர்களிடமிருந்து நல்ல முறையில் விதைகளை வாங்க தனது சமூகத்திற்கு உதவியுள்ளார்.

  ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹார், இத்தகைய முயற்சிகள் ஆண்-பெண் என்ற பாகுபாட்டைத் தணிப்பதற்கும், ஓரங்கட்டப்பட்ட பெண்கள் சமூகம் தன்னம்பிக்கை பெற இது நிச்சயம் உதவும் என்று நம்புகிறார். மஞ்சுவைப் போலவே, அவரது கிராமத்தைச் சேர்ந்த பல பெண்களும் இதுபோன்ற வெற்றிகளை சுவைத்து அதிகாரம் செய்வார்கள் என்று அமிதாப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  ஒரு  துறையில் பெண்கள் வெற்றி பெற்றால் அந்த வெற்றி பெண்ணுக்கானது மட்டுமல்ல பெண்ணின் குடும்பத்திற்கும் அந்த பெண்ணை சுற்றி உள்ள பல பெண்களுக்கும் ஏற்பட்டுள்ள வெற்றியாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மஞ்சு தேவியின் இந்த வெற்றிப்பாதையில் பல பெண்களும் நடைபோட உண்மையில் இந்த கதை உத்வேகம் அளிக்கும் என நம்பலாம்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ram Sankar
  First published: