வேலைக்குச் செல்லும் பெண்கள் குறைந்த நேரம் தூங்கி அதிக நேரம் உழைக்கிறார்கள் - ஆய்வில் தகவல்

தனக்காக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே பெண்கள் செலவு செய்கின்றனர். ஆண்கள் நான்கு மணி நேரம் 40 நிமிடங்கள் தனக்கான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர் என்கிறது ஆய்வு.

வேலைக்குச் செல்லும் பெண்கள் குறைந்த நேரம் தூங்கி அதிக நேரம் உழைக்கிறார்கள் - ஆய்வில் தகவல்
அலுவலகம்
  • News18
  • Last Updated: July 17, 2019, 9:42 PM IST
  • Share this:
இன்றைய காலக்கட்டத்தில் ஆண் , பெண் என்ற பாகுபாடு என்பது கிடையாது என்று பேசி வரும் நிலையில் பெண்கள் அதிக நேரம் அலுவலக வேலை செய்வதாகவும், அதேசமயம் குறைவாக உறங்குவதாகவும் ஆய்வு ஒன்று சொல்கிறது... 

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியிட்ட ஆய்வில் கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது பெண்கள் வேலை பார்க்கும் நேரம் அதிகரித்துள்ளது. அதாவது 2013 ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஆண்டு ஏழு மணி நேரம் 20 நிமிடங்கள் வேலை அதிகரித்துள்ளது. தற்போது அது இன்னும் 20 நிமிடங்களாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர்.

அதேபோல் குழந்தைகளுடன் கழிக்கும் நேரம் என்பது அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்தான் என்பது கவலைத் தரும் விஷயமாக இருக்கிறது. வேலைக்குச் செல்லும் ஆண்களோடு ஒப்பிடும்போது அவர்கள் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கின்றனர் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் வீட்டில் சமையல் , சுத்தம் செய்யும் வேலைக்கு அரை மணி நேரத்திற்கு சற்று கூடுதல் நேரம் செலவு செய்கின்றனர் என்று கூறியுள்ளது. இருப்பினும் இத்தனை பொறுப்புகளுக்கு மத்தியில் எவ்வாறு பெண்கள் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட முடிகிறது என்று கேள்வி எழுகிறதா ?

அதற்கும் விடை இருக்கிறது.அதாவது பெண்கள் தங்களுடைய சொந்த நேரத்தை சமரசம் செய்துகொள்கின்றனர். தன்னுடைய ஹாபி, விளையாட்டு, உடற்பயிற்சி, நண்பர்களுடன் அவுட்டிங் என எல்லாவற்றையும் சமரசம் செய்துகொண்டே இந்த வேலைகளைச் செய்கின்றனர். அவ்வாறு செய்தாலும் தனக்காக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே செலவு செய்கின்றனர்.

ஆண்கள் நான்கு மணி நேரம் 40 நிமிடங்கள் தனக்கான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர் என்கிறது ஆய்வு. பெண்கள் ஹாபி மட்டுமல்லாது தூக்கத்தையும் சமரசம் செய்துகொள்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading