• HOME
  • »
  • NEWS
  • »
  • women
  • »
  • Women's Day 2021: பெண்கள் முன்னேற்றத்திற்காக ‘ஹெர் சர்க்கிள்’ என்ற டிஜிட்டல் தளத்தைத் தொடங்கிய நீட்டா அம்பானி!

Women's Day 2021: பெண்கள் முன்னேற்றத்திற்காக ‘ஹெர் சர்க்கிள்’ என்ற டிஜிட்டல் தளத்தைத் தொடங்கிய நீட்டா அம்பானி!

திருமதி. நீட்டா அம்பானி

திருமதி. நீட்டா அம்பானி

அனைத்து வகையான கலாச்சாரங்களைக் கொண்ட பெண்களும் இந்த டிஜிட்டல் முயற்சியில் இணையும் வண்ணம் இந்த ‘ஹெர் சர்க்கிள்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் திருமதி.நீட்டா முகேஷ் அம்பானி ‘ஹெர் சர்க்கிள்’ என்ற டிஜிட்டல் நெட்வொர்க்கிங் தளத்தைத் தொடங்கியுள்ளார்.

    இத்தளம் பெண்கள் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதையும், தொடர்பு, ஈடுபாடு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றின் மூலம் உலகளாவிய சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    “பெண்கள் ஒன்று சேர்ந்தால், நம்பமுடியாத விஷயங்கள் நடக்கும்! என் வாழ்நாள் முழுவதும் கருணை, எதிர்த்து நிற்றல் மற்றும் நேர்மறை சிந்தனை ஆகியவற்றைக் கொண்ட வலுவான பெண்களால் சூழப்பட்டிருக்கிறேன். அதனால் நான் கற்றுக் கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த முயற்சித்தேன்” என்று இந்த முயற்சி குறித்து நீட்டா அம்பானி கூறினார்.

    அனைத்து வகையான கலாச்சாரங்களைக் கொண்ட பெண்களும் இந்த டிஜிட்டல் முயற்சியில் இணையும் வண்ணம் இந்த ‘ஹெர் சர்க்கிள்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்வியல், உடல்நலம், நிதித்துறை, அழகியல் சார்ந்த பல உள்ளடக்கங்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளது. அதோடு her circle என்ற புதிய இலவச செயலியையும் நீட்டா அம்பானி அறிமுகப்படுத்தியுள்ளார்.

    உடல்நலம், ஆரோக்கியம், கல்வி, தொழில்முனைவோர், நிதி, சேவை, வழிகாட்டல் மற்றும் தலைமை பண்பு போன்ற கேள்விகளுக்கும் ரிலையன்ஸ் நிபுணர் குழு பதிலளிக்கும் வகையில் ’ஹெர் சர்க்கிள்’ தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்முறை திறன்களைக் கண்டறியவும், அவரது சுயவிவரத்திற்கு ஏற்ற வேலை வாய்ப்புகளைப் பெறவும் இந்த சர்க்கிள் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் மை ஜியோ ஆப்பில் இலவசமாகக் கிடைக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: