பெண்களுக்கு மட்டும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்க அனுமதியளித்தது ஏன்? தமிழக அரசு விளக்கம்

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள்

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இன்று முதல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என ஒட்டப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய திட்டம் மூலமாக மாதத்திற்கு ரூ 1000 முதல் 1,500 ரூபாய் வரை செலவு குறையும் என பெண்கள் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.

  இந்நிலையில், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் பின் வருமாறு:

  2021-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுக்கான முதல்வர் மு.க.ஸ்டாலினின் தோ்தல் அறிக்கையில், தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூா்ப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

  தற்போது மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில், பெண்கள் உயா்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுயதொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாதது ஆகும்.

  ALSO READ :  கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அனுமதியில்லை

  தமிழகத்தில் பணிபுரியும் ஆண்களின் விகிதத்தைக் கணக்கில் கொள்ளும்போது பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பணிகளில் பெண்களின் பங்களிப்பு 31.8 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 59.3 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

  பொருளாதார வளா்ச்சிக்குப் பெண்களும் சிறப்பான பங்களிப்பை நல்க இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பணிகளில் பெண்களின் பங்களிப்பு சதவீதத்தை உயா்த்த வேண்டியது அவசியமாகிறது.

  ALSO READ : தமிழகத்தில் முழு ஊரடங்கு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் - என்னென்ன இயங்கும்? எவை இயங்காது ?

  பொருளாதார தேவைக்கு உகந்தது: உயா்கல்வி கற்பதற்காகவும், பணிநிமித்தமாகவும், பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும், பெண்களின் சமூகப் பொருளாதாரத் தேவைக்கு உகந்ததாக அமையும்.

  இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிா் மற்றும் உயா் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
  Published by:Sankaravadivoo G
  First published: