பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரைகள் அளித்து பாலியல் வன்கொடுமை: தற்கொலைக்கு முயன்ற பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில்..

காய்ச்சல் மருந்து தருவதாகச் சொல்லி தூக்க மாத்திரைகளை அளித்து மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தந்தையை கைது செய்திருக்கிறது பெங்களூரு காவல்துறை.

பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரைகள் அளித்து பாலியல் வன்கொடுமை: தற்கொலைக்கு முயன்ற பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில்..
பெங்களூரு வன்கொடுமை
  • Share this:
பெங்களூருவின் ஹரலூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு காய்ச்சலுக்கும், இருமலும் இருந்ததால் வீட்டில் உதவி கேட்டிருக்கிறார்.  காய்ச்சல் மருந்து தருவதாக தூக்க மாத்திரைகளை கொடுத்து மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தந்தையை கைது செய்திருக்கிறது பெங்களூரு காவல்துறை.

காய்ச்சல் மாத்திரைகள் எனக்கூறி தூக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டு தான் வன்கொடுமைக்குள்ளானதை அறிந்துகொண்ட பெண், தனது சித்தியின் (தந்தையின் இரண்டாம் மனைவி) உதவியை நாடியிருக்கிறார். போலீசில் புகார் அளிப்பதற்கு அவரும் மறுக்கவே மனமுடைந்த பெண், பாத்ரூம் கெமிக்கலை கொடுத்துவிட்டு உள்ளூர் காவல்நிலையத்தில் அவராகவே புகார் அளிக்க வந்திருக்கிறார்.

புகாரை உடனடியாக எடுத்துக்கொண்ட காவல்துறை, அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். தீவிர சிகிச்சையின் இருக்கும் அப்பெண்ணின் வாக்குமூலத்துக்காக காத்திருக்கிறார்கள்.


வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த குற்றத்துக்கு அவரது மனைவியும் உடந்தையா என்னும் விசாரணை நடந்துவருகிறது.

தமிழ்நாடு

மாநில சுகாதாரத்துறை தற்கொலை மையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading