கண்கவர் காலணிகளை அளிக்கும் ’தி மெட்ராஸ் ட்ரங்க்’!

இவர் லெதர் மெட்டீரியல் கொண்டு காலணிகளை டிசைன் செய்வதிலிருந்து விலகி காட்டன் ஃபேப்ரிக்கில் வடிவமைப்பதே இவரின் தனித்த அடையாளம்.

கண்கவர் காலணிகளை அளிக்கும் ’தி மெட்ராஸ் ட்ரங்க்’!
இவர் லெதர் மெட்டீரியல் கொண்டு காலணிகளை டிசைன் செய்வதிலிருந்து விலகி காட்டன் ஃபேப்ரிக்கில் வடிவமைப்பதே இவரின் தனித்த அடையாளம்.
  • News18
  • Last Updated: January 26, 2019, 11:30 AM IST
  • Share this:
நாம் என்னதான் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை நேர்த்தியாக அணிந்தாலும் சரியான காலணி இல்லையெனில் அந்த தோற்றம் முழுமை அடையாது. காலணிகள் சிறப்பாகவும், சவுகரியமாகவும் அமைந்துவிட்டால் அதைவிட திருப்தி அன்றைய நாளில் வேறெதுவும் இருக்க முடியாது. அப்படி தனித்துவமான காலணிகளை வடிவமைப்பவர்தான் நிதிலா.இவர் ’தி மெட்ராஸ் ட்ரங்க்’ என்கிற பெயரில் ஃபுட்வேர் பிராண்ட் வைத்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக இந்த பிராண்டை நடத்தி வரும் நிதிலா தனது ஒவ்வொரு காலணியிலும் ஒரு தனித்துவத்தைச் சேர்க்கிறார். அதாவது இவர் ஷூ டிசைன்களைக் காலணியில் சேர்ப்பது, பளீர் நிறங்களை தேர்வு செய்வது என இவரின் ஒவ்வொரு டிசைன்களும் அழகு நிறைந்ததாக இருக்கிறது.


குறிப்பாக இவர் லெதர் மெட்டீரியல் கொண்டு காலணிகளை டிசைன் செய்வதிலிருந்து விலகி காட்டன் ஃபேப்ரிக்கில் வடிவமைப்பதே இவரின் தனித்த அடையாளம். இக்கட் பிரிண்ட், பூக்களின் பிரிண்ட், கலம்காரி பிரிண்ட் என காலணிகளை தன் கிரியேட்டிவிட்டியால் அலங்கரிக்கிறார். லெதர் மெட்டீரியலாக இருந்தாலும் பளீர் நிறங்களால் அவைப் பளிச்சிடுகின்றன.சாண்டல்ஸ் , ஸ்லிப்பர்ஸ், ஸ்னீக்கர் சாண்டல்ஸ் என ஃபிளாட் டிசைன் கொண்ட காலணிகளை மட்டும்தான் தயாரிக்கிறார். விரைவில் ஹீல் வைத்த காலணிகளையும் வெளியிட இருப்பதாகக் கூறுகிறார்.இங்கிருக்கும் மக்களுக்கு ஏற்ற வகையில் காலணிகளைத் தயாரிப்பது என்பது சவாலாது என்கிறார் நிதிலா ”இங்கு இருக்கும் மக்களுக்கு மிகவும் சிறிய கால்கள் அல்லது மிகவும் பெரிய கால்களாக இருக்கும். எனவே அவர்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் முறையில் கால் அளவை எடுத்து அதற்கு ஏற்ப காலணிகளை வடிவமைத்துத் தருகிறேன்” என்கிறார்.அதேபோல் இவரின் மற்றுமொரு அடையாளமாகக் கருதப்படுவது  தனது பிராண்டை தமிழ் பெயர்களால் வர்ணிப்பதுதான். “ நான் வடிவமைக்கும் ஒவ்வொரு காலணிகளின் தொகுப்பிற்கும் பெயர் வைக்கும் படலம் நடந்தது.

அப்போதுதான் வீட்டில் கூட்டாக யோசித்துத் தமிழ் பெயர் வைக்கலாம் என்கிற முடிவிற்கு வந்தோம். எனவேதான் கடல், அலை, இசை, வானவில் என இயற்கை சார்ந்த தமிழ் பெயர்களாக வைத்தோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கும் அந்தப் பெயரைச் சொல்லி வாங்குவதற்கு ஏதுவாக இருக்கிறது” என்கிறார் ஃபுட்வேர் டிசைனிங் படித்த நிதிலா.நிதிலாவிற்கு இத்தனைப் பெரும் வரவேற்புக் கிடைத்திருப்பதே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் “ நான் காலணிகளுக்கான பிராண்டை உருவாக்க விரும்புகிறேன் என்று வீட்டில் கூறிய போது நல்ல வரவேற்பு அளித்தனர். ஆனால் எனக்கு எடுத்தவுடன் பெரிய அளவில் கடைத் தொடங்கி, விளம்பரங்கள் அளித்து ப்ரமோட் செய்வதில் விருப்பமில்லை.

என்னுடைய திறமை மீது நம்பிக்கைக் கொண்டு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியே பிராண்டைப் பரப்பினேன். நாம் விற்பனைச் செய்யும் பொருள் தரமானதாகவும், அதே சமையம் அழகாகவும் இருந்தால் அதற்கு விளம்பரமே தேவையில்லை என்பதை ஒரு வருட வளர்ச்சியில்தான் தெரிந்து கொண்டேன்.வாங்க வரும் வாடிக்கையாளர்களே தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லி அவர்களே புரமோட்டர்களாக மாறியதன் விளைவுதான் இத்தனைப் பெரும் வளர்ச்சி. 6 மாதங்களுக்கு முன் தான் வெப்சைட் உருவாக்கினேன். தற்போது வெப்சைட் வழியாகவும் வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்திருக்கின்றனர் என்கிறார் நிதிலா.

இவரின் பிராண்ட்  சென்னையில் இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் டெலிவரி செய்கிறார். அதேபோல் நண்பர்களுக்கு பரிசளிக்க விரும்பினாலும் தகவல்கள் அளித்தால் கண்கவர் கிஃப்ட் பேக் வைத்தும் டெலிவரி செய்கிறார் நிதிலா.
First published: January 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்