உயிரை மாய்த்துக்கொண்ட மகள்: கணவர் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது பெண்ணின் குடும்பம் (வீடியோ)

ஃபேஸ்புக் போஸ்ட் ஒன்றில் தனது கணவர் வெங்கடேஷ்வரலு செய்த சித்ரவதைகளை குறிப்பிட்டு விட்டு கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். லாவண்யாவை அவரது கணவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி வீடியோவை வெளியிட்டிருக்கிறது அவரது குடும்பம்.

உயிரை மாய்த்துக்கொண்ட மகள்: கணவர் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது பெண்ணின் குடும்பம் (வீடியோ)
மென்பொருள் பொறியாளர் தற்கொலை
  • Share this:
தெலங்கானா, ஷம்ஷாபாதின் ரல்லாகுவா பகுதியில், மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த லாவண்ய லஹிரி, ஃபேஸ்புக் போஸ்ட் ஒன்றில் தனது கணவர் வெங்கடேஷ்வரலு செய்த சித்ரவதைகளை குறிப்பிட்டு விட்டு கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். லாவண்யாவை அவரது கணவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி வீடியோவை வெளியிட்டிருக்கிறது அவரது குடும்பம்.

சிசிடிவி வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், வெங்கடேஸ்வரலு லாவண்யாவைக் கடுமையாக தாக்குவதும், அதை லாவண்யா தடுப்பதும், வீட்டில் வளர்க்கப்பட்டும் அவர்களின் செல்ல நாய் தாக்குதலைத் தடுப்பதும், சிறிது நேரத்துக்குப் பிறகு லாவண்யா மெதுவாக அழுந்து வயிற்றில் கையை வைத்தபடியே நடப்பதும் பதிவாகியிருக்கிறது.

பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில், லாவண்யாவின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்த அவரது நண்பர்கள், உடனடியாக லாவண்யாவில் பெற்றோருக்கும், அவரது கணவருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். வெங்கடேஸ்வரலு வீட்டை அடைந்தபோது, லாவண்யா உயிருடன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2012-இல், தனியார் ஏர்லைன் நிறுவனத்தில் பைலட்டாக பணிபுரியும் வெங்கடேஸ்வரலுவைக் காதல் திருமணம் செய்துகொண்ட லாவண்யா, குழந்தை இல்லாத காரணத்திற்காக தொடர்ச்சியாக வெங்கடேஸ்வரலுவாலும், அவரது குடும்பத்தாராலும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து தற்கொலைக் கடிதத்தை  சைபராபாத் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு

மாநில சுகாதாரத்துறை தற்கொலை மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading