தமிழகத்தில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த ,
கைவிடப்பட்ட ,
ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் /
வெள்ளாடுகள் வழங்க ரூ .75
கோடியே 63
லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38
ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94
ஆயிரம் ஆடுகள் வாங்க நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.
யார் பயனாளி :
பயனாளிகளில் குறைந்தது 30 சதவிகிதம் எஸ் .சி மற்றும் எஸ் .டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் .
நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்
ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் . குறிப்பாக ஏற்கனவே ஆடுகள் , மாடுகள் வைத்திருக்க கூடாது .
எப்போது வழங்கப்படும் :
தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும் ,
அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. Published by: Ramprasath H
First published: November 26, 2021, 10:10 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Business , Business Idea , Government , Woman