பாலின பேதத்தை உடைத்த பெருமை... பார்பர் ஷாப் நடத்தி வரும் சகோதரிகள்...!

பார்பர் ஷாப் நடத்தி வரும் பெண்கள்

இதுதான் பெண்களுக்கான உரிமை, சுந்ததிரம் என்பதை உடைக்கிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  முன்பெல்லாம் விளம்பரங்கள் என்றாலே தவிர்க்கக் கூடியதாக இருக்கும். இன்று விளம்பரங்கள் புரட்சிகள் செய்யக் கூடியதாகவும், பேசு பொருளாகவும் மாறிவருகின்றன.

  விளம்பர நிறுவனங்களும் விளம்பரம் இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் இப்படியும் எடுக்கலாம் என தன்னுடைய ஸ்டீரியோடைப்பை உடைத்து வருகின்றன.

  ஹமாம், ஸ்டேஃப்ரீ போன்ற விளம்பரங்கள் ஒவ்வொரு முறையும் டிவியில் ஒளிபரப்படும்போது அவை தவிர்க்க முடியாத விளம்பரங்களாகின்றன. ஒவ்வொரு முறையும் அவை பெண்களின் சுந்திரம், உரிமைகளை உணர்த்துவதாக இருக்கின்றன. வளரும் சிறுமிகளும் அதைப் பார்க்கும்போது ஒரு நிமிட விழிப்புணர்வு என்றே காணக்கூடுகிறது.  அந்த வகையில் ஆண்களுக்கான ஷேவிங் பொருட்களை விற்பனை செய்யக் கூடிய ஜில்லெட் நிறுவனமும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஷேவிங் கிரீம் விளம்பரத்தில் என்ன புரட்சி என்று யோசிக்கிறீர்களா ?

  நேற்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு ஜில்லெட் விளம்பரம் வைரலானது. அதில் இரண்டு பெண்கள் தங்களுடைய கிராமத்தில் பார்பர் ஷாப் நடத்திவருகின்றனர். அவர்கள் அந்த ஊர் ஆண்களுக்கு ஷேவ் செய்கின்றனர் என்பதே அந்த வீடியோ.

  இந்த வீடியோ ஏப்ரல் 26 ஆம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அது மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கும் இந்த செய்தி ஆண்களுக்கு நிகரான சமநிலையை அடைந்த பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது. இதுதான் பெண்களுக்கான உரிமை, சுந்ததிரம் என்பதை உடைக்கிறது.

  அதாவது அந்த வீடியோவில், அப்பாவும், மகனும் பார்பர் ஷாப் செல்கின்றனர். அங்கு இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஷேவ் செய்ய வேண்டும் என தந்தைக் கூற அந்த மகன் பெண்கள் எப்படி ஷேவிங் செய்ய முடியும் என்று கேட்கிறார்.

  அதற்குத் தந்தை.”மகனே உனக்கு எப்போது ஆண், பெண் என்ற பேதம் தெரிந்தது?” என்று கேட்கிறார்.

  பின் அந்தப் பெண்ணிடம், மகளே நீ வேலையைத் தொடங்கு என சொல்ல அந்த பெண் ஷேவிங் செய்கிறார். அந்த சிறுவனும் பாலின பேதமில்லை என்பதை உணர்கிறார். இவ்வறாக அந்த வீடியோ முடிகிறது. அதன் இறுதியில் இப்படி நிஜமாக வாழும் இரண்டு பெண்களுக்கு சல்யூட் கூறி மரியாதை செலுத்தி வீடியோ நிறைவுபெறுகிறது.  யார் அந்த இரண்டு மரியாதைக்குரிய பெண்கள் ?

  இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பன்வாரி டோலா என்னும் குக்கிராமத்தில் வசிக்கக் கூடிய பெண்கள்தான் ஜோதி மற்றும் நேஹா.

  மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த பெண்களின் தந்தை பார்பர் ஷாப் நடத்தி வந்தவர். தன் தந்தையின் இறப்பிற்குப் பின் என்ன செய்வதென்று சோர்ந்துவிடவில்லை, தன் தந்தை பிடித்த சவரக் கத்தியை இரண்டு பெண்களும் பங்குபோட்டுக் கொண்டனர்.

  இவர்களின் இந்த தொழிலை அங்கிருக்கும் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தால் முரன்பாடுகளுக்காக போராடியவர்கள் என்கிற விருதைப் பெற்றுள்ளனர்.

  இதையும்  படிக்க..

  மீண்டும் மீண்டும் வலையில் சிக்கும் இளம்பெண்கள்: தீர்வு தான் என்ன?

  பெண்கள் பணியிடத்தில் கட்டாயம் கேட்க வேண்டிய உரிமைகள்!

  தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
  Published by:Sivaranjani E
  First published: