வரலாற்றில் முதன்முறையாக மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணை..!

சென்னை உயர்நீதிமன்றம்

இ.எஸ்.ஐ. எனும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது தொடர்பான வழக்கை விசாரிக்க நியமனம்.

 • Share this:
  சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு ஒரு வழக்கை விசாரிக்கவுள்ளது.

  சர்வதேச மகளிர் தினம் வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இ.எஸ்.ஐ. எனும் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்பது தொடர்பான வழக்கை விசாரிக்க, புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார்.

  சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் இரு பெண் நீதிபதிகள் வழக்குகளை விசாரித்துள்ளபோதும், மூன்று நீதிபதிகள் அமர்வு தற்போது தான் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

  சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 55 நீதிபதிகளில் தற்போது ஒன்பது பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Sivaranjani E
  First published: