அரசுப்பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்... ஸ்டீரியோ டைப்பை உடைத்து சாதனை..!

இது என்னால் மட்டுமல்ல. எல்லா பெண்களாலும் முடியும்- பிரதிக்‌ஷா தாஸ்

 அரசுப்பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்... ஸ்டீரியோ டைப்பை உடைத்து சாதனை..!
இது என்னால் மட்டுமல்ல. எல்லா பெண்களாலும் முடியும்- பிரதிக்‌ஷா தாஸ்
  • News18
  • Last Updated: July 12, 2019, 1:24 PM IST
  • Share this:
இது பெண்களுக்கான காலம் என்பது உண்மைதான். அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது இந்தப் பெண்ணியச் சமூகம். 24 வயதே ஆன பிரதிக்‌ஷா தாஸ் மும்பையில் அரசு பேருந்து ஓட்டுநராக நகரைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுவும் மும்பையின் மிகப்பெரும் சிட்டியான ப்ரிஹான் மும்பையின் ( Brihanmumbai ) பிரபலமான கோர்கான் ( Goregaon bus depot ) டிப்போவிலிருந்துதான் இவரின் பயணம் துவங்குகிறது.

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடித்த பிரதிக்‌ஷாவிற்கு பெரிய கனரக வாகனங்களை ஓட்டுவது சிறு வயதிலிருந்தே ஆர்வமாம். ஆட்டோமொபைல் மீதான மிகப்பெரும் ஆர்வமே அவரை மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க வைத்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

”பெண்கள் பஸ் ஓட்டக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. இது என்னால் மட்டுமல்ல. எல்லா பெண்களாலும் முடியும். அதற்கு மனதின் உறுதியும், மூளையின் ஈடுபாடும் இருந்தால் இலக்கை அடைய எதுவும் சாதகப்படும்” என்று கூறியுள்ளார் பிரதிக்‌ஷா.
பிரதிக்‌ஷாவின் இந்தக் கனவும் எளிதில் கிடைத்துவிடவில்லை. பல கிண்டல், கேள்விகளுக்கு உள்ளான பிறகே ஓட்டுநர் என்ற அங்கீகாரம் சாத்தியமாகியிருக்கிறது.

”எனக்கு கற்றுக் கொடுத்த ஆண் பயிற்சியாளர் உனக்கு உடல் வலிமை இருக்கிறதா, இது கார் போன்று திருப்பியதும் ஸ்மூத்தாக வளையக் கூடிய சக்கரங்கள் அல்ல. உன்னுடைய முழு ஆற்றலையும் அளித்து திருப்பினால்தான் திரும்ப முடியும். அந்த அளவு நீ வலிமை கொண்ட பெண்ணா?, பார்ப்பதற்கே ஒல்லியாக இருக்கிறாயே என்று திட்டினார்” எனக் கூறியுள்ளார். இப்படியாக 30 நாட்கள் பயிற்சி வெற்றிகரமாகக் கழிந்து உரிமம் பெற்றுள்ளார்.தற்போது நகரத்தின் சிறந்த பெண் பேருந்து ஓட்டி என்று பயணிகளால் பாராட்டுகளை அவர் பெற்று வருகிறார்.

பிரதிக்‌ஷாவிற்கு இதோடு கனவு நின்றுவிடவில்லை. ஆர்.டி.ஓ அலுவலராக வேண்டும் என்பதுதான் அவரின் அடுத்த இலக்கு. தற்போது அதை நோக்கிய பயணத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்ததாக.. வேறென்ன..விமானத்தை இயக்க வேண்டும் என்ற கனவுதான்.

விமானப் பயிற்சிக்கு 40 மணி நேரத்திற்கு 5 - 6 லட்சம் தேவைப்படுகிறது என்பதால் அதற்கான பணத்தைதான் தற்போது சேமித்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார் பிரதிக்‌ஷா தாஸ்.  இவர் சிறந்த கார் ரேஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading