சாதனைப் பெண்கள் 1: பெண்களால்... பெண்களுக்காக வளர்ந்த ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்

வெற்றிப் பாதையில் தான் மட்டும் பயணித்தால் போதாது என தன் சக தோழிகளையும் உடன் அழைத்துக்கொண்டவர் இன்று பல பெண் தொழில் முனைவோர்களின் அடித்தளத்தையேக் கட்டமைத்துக் கொடுத்து வருகிறார்.

சாதனைப் பெண்கள் 1: பெண்களால்... பெண்களுக்காக வளர்ந்த ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்
பெண் தொழில் முனைவோர்கள்
  • News18
  • Last Updated: May 6, 2019, 8:09 PM IST
  • Share this:
பெண்களாலும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாகவும் நடத்த முடியும் எனப் பெண்களுக்காக பெண்களால் மட்டுமே இயங்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வழி நடத்தி வருகிறார் ரேணுகா கவுரிசங்கர்.

மதுரையைச் சேர்ந்தவர் திருமதி ரேணுகா கவுரிசங்கர். பி.எஸ்சி என்னும் ஒரே கல்வித் தகுதியுடன் வெறும் 2ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவருக்கு பேருக்காக வாழும் ‘மாதச் சம்பளம்’ வாழ்க்கையில் சற்றும் உடன்பாடில்லை. சுயமாக எது செய்ய முயன்றாலும் ‘பெண் தானே..!’ என்ற சலிப்புகளுக்கும் ‘ஆங்கிலம் கூடத் தெரியாதா’ என்ற மேதாவித்தனங்களுக்கும் மத்தியில் தான் தனது வெற்றிப் பாதையை அமைத்துக்கொண்டுள்ளார் ரேணுகா.

ரேணுகா கவுரிவெற்றிப் பாதையில் தான் மட்டும் பயணித்தால் போதாது என தன் சக தோழிகளையும் உடன் அழைத்துக்கொண்டவர் இன்று பல பெண் தொழில் முனைவோர்களின் அடித்தளத்தையேக் கட்டமைத்துக் கொடுத்து வருகிறார். தனது பயணம் குறித்து நம்மிடையே விளக்கியவர், “எல்லாப் பெண்களும் கடந்து வரும் அதே கஷ்ட நஷ்டங்கள்தான். பி.எஸ்சி மட்டும் படிச்சு வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். எந்தவொரு அடித்தளமும் இல்லைன்னாலும் சொந்தமா ஏதாவது சாதிக்க முடியாதான்னு நினைக்காத நாளே இல்ல.

அந்த வேலையில இருக்கும்போது ‘சாஃப்ட் ஸ்கில்ஸ்’ன்னு சொல்ற மென் திறன் வளர்ப்புப் பயிற்சியில ஈடுபடுற வாய்ப்புக் கிடச்சது. ஆனா அதைத் தொழில் ஆக்கலாம்ன்னு முயற்சி செய்யும் போது இங்கிலீஷ் தெரியலைன்னு நிறைய பேர் என்ன ஒதுக்கிட்டாங்க. சில நேரம் சின்ன சின்ன கல்லூரிகள் ‘சாஃப்ட் ஸ்கில்’ பயிற்சி எடுக்க கூப்டுவாங்க. பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க நாமும் கத்துக்கிட்டேதான இருக்கணும்.

அதுக்குத்தான் ‘சாஃப்ட் ஸ்கில்ஸ்’ மட்டுமில்ல என்னோட ஆங்கிலத் திறனையும் கொஞ்சம் கொஞ்சமா வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனா, போன இடத்துல இருந்தெல்லாம் பேமண்ட் வரவே வராது. ஒரு நாள் பூரா க்ளாஸ் எடுத்தாலும் 600 ரூபாய் தான் பேமண்ட் பேசியிருப்பேன். ஆனா, அந்தப் பணத்தக் கூட தரமாட்டாங்க.அந்த சமயம்தான் என்னை நானே வளர்த்துக்க ஒரு பயிற்சி வகுப்புக்குப் போயிருந்தேன். அங்க கிடைச்ச ஒரு நண்பர் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தோட சேர்ந்து வேலை செய்ய ஒரு வாய்ப்புக் கிடச்சது. தமிழ்நாட்டுல இருக்குற அத்தன மாவட்டத்துலயும் இருக்குற பதிவாளர் அலுவலகத்தில் சாஃப்ட்வேர் பயிற்சி கொடுக்குற வாய்ப்பு.

இந்த அனுபவம்தான் என்னை வளர்த்து எடுத்துச்சு. சொந்தமா ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கி பல காலேஜ்களுக்குப் போய் வாய்ப்புக் கேட்டேன். அந்த நேரம் திருமணம், குழந்தைன்னு வாழ்க்கைப் புது பாதைத் தேடிப் போச்சு. வீட்ல சும்மா இருந்தா சரி வராதுன்னு மறுபடி களத்துல குதிச்சாச்சு.

‘கார்மெட் சொலியூஷன்’ அப்டின்னு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிச்சு காலேஜ் பசங்களுக்கு மட்டும் இல்லாம ஹவுஸ் வொய்ஃப் எல்லாருக்கும் பயனா இந்த நிறுவனம் இருக்கனும்னு முடிவு செஞ்சோம்.

ஏழு வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் எங்க ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலமா மட்டும் சுமார் 1,200 பேருக்கு மேல வேலை கிடைச்சு நல்ல நிலையில இருக்காங்க. சுயதொழில், பெண் தொழில் முனைவோர்ன்னு எங்க வார்ப்புகள் இன்னைக்கி ரொம்பப் பெரிய எடத்துல இருக்காங்க. இப்டி பெரிய இடத்துல இருக்கிற ஒரு ஏழு பேர் சேர்ந்து இப்போ பெண் தொழில்முனைவோர் குழு தொடங்கி சாதனையாளர்களை உருவாக்கவும் சாதனையாளர்களை கவுரவிக்கவும் செய்திட்டு இருக்கோம்” என்கிறார் பெருமையுடன்.

மேலும் பார்க்க: திருக்குறளை பின்னோக்கி எழுதி அசத்தும் கோவில்பட்டி மாணவி!
First published: May 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading