ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

கணவர் இறந்த நிலையில் வீட்டை காலி செய்ய மிரட்டும் கொழுந்தன்... கலெக்டர் அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க மனு

கணவர் இறந்த நிலையில் வீட்டை காலி செய்ய மிரட்டும் கொழுந்தன்... கலெக்டர் அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க மனு

கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்

கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்

விருதுநகரில் வீட்டை காலி செய்ய சொல்லி உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால் மாவட்ட ஆட்சியரிடம் தனது பிள்ளைகளுடன் சென்று பெண் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  கணவர் இறந்த நிலையில், வீட்டை காலி செய்யச் சொல்லி  உறவினர்கள் கொலை மிரட்டல் விடுகின்றனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது குழந்தைகளுடன்  கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு அளித்துள்ளார். 

  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலை சேர்ந்தவர் ராமலட்சுமி.  இவர் தனது பிள்ளைகளுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “  எனது கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், புறம்போக்கில் மாமனார் கட்டிய வீட்டில், அவருடன் வசித்து வந்தோம். மாமனாரும் கடந்த வாரம் இறந்து விட்டார்.

  நத்தம் புறம்போக்கில் கட்டிய வீட்டைவிட்டு வெளியேறும்படி கணவ ரின் தம்பி ஆறுமுகச் சாமி, அவரின் மனைவி பிச்சையம்மாள் தகராறு செய்து வருகின்றனர். குழந்தைகளுடன் தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. காலை சமைப்பதற்கு அடுப்பை பற்ற வைத்த போது அடுப்பில் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டனர்.

  Also see... நண்பனை காப்பாத்துங்க.. சாலையில் அடிபட்ட நாய்க்காக ஒன்றுகூடிய தெரு நாய்கள்..!

  கதவு, ஓடுகளை உடைத்து அச்சுறுத்தி வருகின்றனர். குழந்தைகள் நிலையை கருத்தில் கொண்டு, எங்களை காப்பாற்ற வேண்டும். தற்போது வசிக்கும் வீட்டில் பிரச்னையின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Virudhunagar