ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

கிரைண்டரில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு... ராஜபாளையத்தில் சோகம்

கிரைண்டரில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு... ராஜபாளையத்தில் சோகம்

மாதிரி படம்

மாதிரி படம்

Virudhunagar | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கிரைண்டரில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியானார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஐஎன்டியுசி நகரை சேர்ந்தவர் பாஸ்கர பாண்டியன். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ள இவருக்கு 45 வயதான ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். மகள் வர்ஷா தனியார் கல்லூரியில் முதலாமாண்டும், மகன் விஷ்ணு சங்கர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.

  இந்நிலையில் நேற்று கணவர் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்த சமயம்  ராமலட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது  மாவு அரைப்பதற்காக கிரைண்டரை தயார்படுத்தி உள்ளார். மழை பெய்து கொண்டிருந்ததால், வயரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு கிரைண்டரை தயார் செய்து கொண்டிருந்த ராமலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  Also see... கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

  பள்ளி முடிந்து வந்த விஷ்ணு சங்கர், தன்னுடைய தாய் மின்சாரம் பாய்ந்து பலியானது தெரிந்து தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம்  விசாரணை நடத்தினர்.

  விசாரணைக்கு பிறகு ராமலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  செய்தியாளர்: M.  செந்தில்குமார், சிவகாசி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Death, Shocks, Virudhunagar, Women