Home /News /virudhunagar /

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் அடித்துக்கொலை.. விபத்து போல் சித்தரித்து நாடகமாடிய மனைவி கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் அடித்துக்கொலை.. விபத்து போல் சித்தரித்து நாடகமாடிய மனைவி கைது

கணவனை கொலை செய்த மனைவி

கணவனை கொலை செய்த மனைவி

Virudhunagar : திருச்சுழி அருகே கள்ளக்காதலுக்காக 22 வயது இளைஞருடன் சேர்ந்து, கணவரை அடித்து கொலை செய்துவிட்டு விபத்துபோல் நாடகமாடிய 43 வயது பெண் உள்ளிட்ட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, 22 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கணவரை அடித்து கொலை செய்துவிட்டு, சாலையோறம் உடலை வீசி விபத்து போல் நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம்  கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் முத்துராமலிங்கம் (45).
  இவர் கடந்த வருடம் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் திருச்சுழி காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்தனர்.

  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி போலீசார் சடலமாக கிடந்த முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து அவரது பெரியப்பா மகன் முருகன் என்பவர் முத்துராமலிங்கத்தின் இறப்பில் மர்மம் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் நடந்தது திட்டமிட்ட கொலையா? அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  பின்னர் விருதுநகரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து நேராக முத்துராமலிங்கம் வீட்டிற்கு சென்றது. இதனையடுத்து போலீசாருக்கு கொலையாக இருக்கும் என சந்தேகம் கிளம்பியதால் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா விடம் (43) விசாரணை நடத்தினர்.

  பின்னர் விசாரணையில் சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி என்பதும், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தை அன்னபூரணியுடன் முத்துராமலிங்கத்துடன் வந்து குடும்பம் நடத்தி வந்ததாகவும், தற்போது  இருவரும் திருச்சுழி பகுதியில் குடியிருந்து பின்பு எம்.புளியங்குளம் கிராமத்தில் புதிதாக வீடு கட்டி அங்கு குடியிருந்து வந்துள்ளனர்.

  முத்துராமலிங்கம் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன் மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் இருந்து வந்தவர், நேரம் கிடைக்கும் போது தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதற்கிடையில் சுனிதா அவரது கணவர் ஒர்க்ஷாப்பில் சிறுவயதிலிருந்து வேலை பார்த்த பள்ளிமடத்தைச் சேர்ந்த மலையரசன் ( 22) என்ற இளைஞருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்தது அவரது கணவருக்கு தெரிய வரவே அவர் மனைவியை  கண்டித்துள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சுனிதா செல்போனில் கள்ள காதலன் மலையரசனிடம் தனது கணவரை கொலை  செய்ய திட்டம் தீட்டினர். இத்திட்டத்தில் முத்துராமலிங்கத்தை கொலை செய்து சடலத்தை விபத்து நடந்தது போன்று அரங்கேற்றுவோம் என கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த மலையரசன்  அவரது நண்பர் எம். புளியங்குளத்தைச் சேர்ந்த சிவா (23)  என்பவருடன் இணைந்து இரவு வீட்டிற்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை கட்டையால் தாக்கி  கொலை செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர், முத்துராமலிங்கத்தின் இரு சக்கர வாகனத்திலேயே அவரின் உடலை கொண்டு சென்று, நரிக்குடி - திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே விபத்து ஏற்பட்டு இறந்ததை போன்று செட்டப் செய்து அங்கு போட்டு விட்டு சென்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

  Must Read : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு..

  இதனை தொடர்ந்து சுனிதா, மலையரசன், அவரது நண்பர் சிவா ஆகிய  மூவரையும்  திருச்சுழி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது ‌.

  செய்தியாளர் - கணேஷ்நாத் அய்யம்பெருமாள் ( விருதுநகர்)
  Published by:Suresh V
  First published:

  Tags: Crime News, Murder, Virudhunagar

  அடுத்த செய்தி