Home /News /virudhunagar /

விருதுநகர் விஸ்வகர்மா காளியம்மன் கோவில் சிறப்புகள் தெரியுமா?

விருதுநகர் விஸ்வகர்மா காளியம்மன் கோவில் சிறப்புகள் தெரியுமா?

விருதுநுகர் விஸ்வகர்மா கோவில்

விருதுநுகர் விஸ்வகர்மா கோவில்

விருதுநகர் விஸ்வகர்மா காளியம்மன் கோவில் மக்கள் வணங்கும் முக்கிய கோவிலாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விருதுநகரில் காளியம்மன் கோவில் ஒன்று மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. வடக்கு ரத வீதியில் தேசபந்து மைதானத்தையொட்டி அமைந்துள்ளது விஸ்வகர்மாகாளியம்மன் கோவில். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல் படும் இத்திருக்கோயிலில் வந்து வழிபட்டு சென்றால் பிரச்சினைகள் தீரும் என மக்கள் நம்புகின்றனர்.

    கோவில் அமைவிடம்:

    தேச பந்து மைதானத்திற்கு அருகில் பாராசக்தி மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது விஸ்வகர்மாகாளியம்மன் கோவில். பாராசக்தி மாரியம்மனை தரிசிக்க வருபவர்கள் விஸ்வகர்மா காளியம்மனையும் வழிபட்டு செல்வது வழக்கம். கோவிலின் முற்றத்தில் யோக ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

    விஸ்வகர்மா கோவில் மூலவர்


    இங்கே புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விஷேச பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதன் இடது பக்கத்தில் விநாயகர் சன்னதியும் அருகிலேயே முருகனுக்கு உபசன்னதியும் உள்ளது. மறுபுறத்தில் விஸ்வகர்மா காளியம்மன் கோவில் காணப்படுகிறது.

    தீ மிதிக்கும் குழி


    இங்கு எழுந்தருளியுள்ள காளியம்மன் திருக்கோயில் தான் விருதுநகரில் காணப்படும் காளியம்மன் கோவில்களில் மிகப்பழமையான கோவில் என்று கூறப்படுகிறது.

    விஸ்வகர்மா கோவில்


    முதன்மை திருக்கோயில் என்ற வகையில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலானது 1927ன் அறநிலைய பாதுகாப்பு சட்டத்தின் படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தற்போது அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    விஸ்வகர்மா கோவில்


    இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடித்திருவிழாவில் பூ மிதித்தல், மாவிளக்கு எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திகடன்களை செய்து வழிபட்டு வருகின்றனர். இவை தவிர ஆவணி மாதம் சிவன் கோயில் மண்டகப்படி திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி