Home /News /virudhunagar /

வீட்டுக்கு வீடு பிடி அரிசி சேகரித்து உருவானது: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வரலாறு தெரியுமா?

வீட்டுக்கு வீடு பிடி அரிசி சேகரித்து உருவானது: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வரலாறு தெரியுமா?

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில்

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில்

விருதுநகரின் மையத்திலுள்ள வெயிலுகந்தம்மன் கோவில் 18-ம் நூற்றாண்டில் மக்கள் ஒன்றிணைந்து கட்டிய கோவிலாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தென்தமிழகத்தில் அமைந்துள்ள விருதுநகருக்கும் விருதுநகர் வாழ்மக்களுக்கும் எப்போதும் மூன்றே காலநிலை தான் ஒன்று மிதமான வெயில், இரண்டு அதிகமான வெயில், மூன்று மிகஅதிகமான வெயில்.

    இப்படி வெயிலுக்கும், வெக்கைக்கும் பழகிய இவர்களை வெயில் மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை. கந்தக பூமியான இந்நகரிலும் சிறிது மழை பொழிந்து மக்களை காக்க மக்கள் இங்குள்ள பாராசக்தி மாரியம்மனையும், அவரது சகோதரி வெயிலுகந்தமனையுமே நம்பியுள்ளனர்.

    வெயிலுகந்தம்மன் கோவில் கோபுரம்


     

    விருதுநகர் சகோதரிகள் இருவரும் நகரின் மையப்பகுதியிலே எதிர் எதிரில் கோவில் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கின்றனர். இதில் வெயிலுகந்தம்மன் கோவில் சரியாக பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் வடக்குரத வீதியில் அமைந்துள்ளது.

    கோவில் வரலாறு:

    மற்ற கோவில்களை போல் அல்லாமல் இக்கோவிலின் வரலாறு சற்றே வித்தியாசமானது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இக்கோவிலை கட்டியுள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இயன்ற நல்ல காரியங்கள் செய்தால்தான் ஊர் செழுமை பெரும் என நம்பினர். அதன் விளைவாக கட்டப்பட்டது தான் இக்கோவில்.

    வெயிலுகந்தம்மன் கோவில்


    இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பிடி அரிசி பெறப்பட்டு பின்பு அது விற்பனை செய்யப்பட்டு அதில் கிடைத்த வருமானம் இக்கோவில் கட்ட பயன்படுத்தப்பட்டது. சிறுதுளி பெருவெள்ளமாய் பிடி அரிசி சிறுக சிறுக பெறப்பட்டு 1838ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த வெயிலுகந்த அம்மன் கோயில்.

    கோவில் சந்நதி


    முருகனுக்கு வேல் கொடுத்த காரணத்தால் முதலில் வேலுகந்த அம்மன் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே மாறி வெயிலுகந்த அம்மன் என்றானதாய் சிலர் கூறுகின்றனர்.

    கோவில் சந்நதி


    கோவில் அமைப்பு:

    150 ஆண்டு பழமையான இக்கோவிலின் மூல ஸ்தானத்தில் அம்மன் வீற்றிருக்கிறார். இவை தவிர துர்க்கை அம்மன், விநாயகர், பால சுப்ரமணிய சுவாமி ஆகியோர்க்கும் சன்னதிகள் உள்ளன. வெளிப்புறத்தில் அரச மரத்தடியில் விநாயகருக்கும் அதன் மறுபுறம் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கும் சன்னதிகள் உள்ளன.

    வெயில்கந்தம்மன் கோவில் செல்வதற்கான கூகுள் மேப்:


    விஷேச நாட்கள்:

    வெயில் மனிதர்களின் காவல் தெய்வமாக திகழும் அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா, ஊர் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், கயிறு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி