Home /News /virudhunagar /

நீர் மேலாண்மையை உணர்த்தும் விருதுநகர் தெப்பம் - வியக்க வைக்கும் உண்மைகள்

நீர் மேலாண்மையை உணர்த்தும் விருதுநகர் தெப்பம் - வியக்க வைக்கும் உண்மைகள்

விருதுநகர் தெப்பகுளம்

விருதுநகர் தெப்பகுளம்

விருதுநகர் நகரிலேயே உள்ள பாராசக்தி மாரியம்மன் கோவில் தெப்பக்குளம், அந்த ஊர் மக்களின் முக்கிய அடையாளமாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தற்போதைய 5ஜி காலத்தில் பாறைகளை குடைந்து குளங்களை வெட்டி முடிப்பது என்பது சுலபமான காரியம். ஆனால் இவை எதுவுமே இல்லாத காலத்தில் இவையெல்லாம் எப்படி சாத்தியப்பட்டது என்று யோசித்து பார்த்தால் அங்கே தான் வெளிப்படுகிறது நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மையும், உழைப்பும்.

    முறையாக நீர் மேலாண்மை செய்ய தினறி வரும் இன்றைய சூழலில் ஊர்தோறும் கண்மாய்கள், குளங்கள் அமைத்து அவற்றை முறையாக பராமரித்த நம் முன்னோர்களின் நீர் மேலாண்மையை அறிந்து கொள்வது அவசியம். நீர் மேலாண்மைக்கு சிறந்த உதாரணமாய் நம் விருதுநகர் நகரிலேயே உள்ள பாராசக்தி மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தை கூறலாம்.

    விருதுநகர் தெப்பம்


    தென் மாவட்டமான விருதுநகர் வறண்ட பகுதியாக காணப்படுகிறது. மழை மறைவுபகுதியான இதன்‌ நீர் தேவையை பூர்த்தி செய்ய சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே நகரின் மையப்பகுதியில் குளம் வெட்டப்பட்டு மழை நீர் சேகரிப்பு செய்யப்பட்டது. மழைநீர் சேகரிப்பு, சரியான திட்டமிடல், நீர் பகிர்ந்தளிப்பு ஆகியாற்றால் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வந்தது.

    விருதுநகர் தெப்பம்


    தெப்பக்குளம் வற்றாமல் பாதுகாக்க கவுசிகா ஆற்றில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்டது. தற்போது கவுசிகா நதி கழிவுகளால் மாசடைந்து காணப்படுவதால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நீர் கொண்டு வரப்படுகிறது. தெப்பக்குளத்தில் நீர் குறைந்து காணப்படும் போது குளத்தை தூர்வாரி சகதிகளை அகற்றி முறையாக பராமரித்து வருகின்றனர்.

    விருதுநகர் தெப்பம்


    நகரின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ள இக்குளம் எப்போதும் நீர் நிறைந்து காணப்படுவதால் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரானது உயர்ந்து காணப்படுகிறது. மேலும் அருகில் உள்ள மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    விருதுநகர் மக்களுக்கு இந்த தெப்பம் எவ்வளவு முக்கியம் என்றால் வெளியூரில் தங்கி வேலை செய்யும் இவ்வூரை சேர்ந்தவர்கள், ஊர்க்காரர்களை பார்த்தால் முதலில் "தெப்பத்துல எவ்ளோ தண்ணி இருக்கு" என்று தான் கேட்பார்கள். அந்த அளவுக்கு தெப்பம் விருதுநகர் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

    முன்பெல்லாம் பங்குனி பொங்கல் திருவிழாவில் டெல்லி அப்பளங்களை வாங்கி கொண்டு தெப்பக்குள படிக்கட்டுகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்து தெப்பத்தின் அழகை ரசித்துக் கொண்டே வாங்கி வந்த திண்பண்டங்களை சாப்பிட்டு மகிழ்வர். ஆனால் தற்போது தெப்பத்தை பாதுகாக்க ஆட்கள் செல்ல முடியாதவாறு சுற்றிலும் கிரில் கேட் அமைத்துள்ளனர். இதனால் இரவு நேரத்தில் மின்னொளியில் மிளிரும் தெப்பத்தின் அழகை ரசிக்க முடியா ஏக்கத்துடன் கடந்து செல்கின்றனர் மக்கள்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி