Home /News /virudhunagar /

பராமரிப்பின்றி குல்லூர்சந்தை நீர்த்தேக்கம்: வறண்டுபோகும் விவசாய நிலங்கள்- மக்கள் வேதனை

பராமரிப்பின்றி குல்லூர்சந்தை நீர்த்தேக்கம்: வறண்டுபோகும் விவசாய நிலங்கள்- மக்கள் வேதனை

விருதுநகர் குல்லூர்சந்தை அணை

விருதுநகர் குல்லூர்சந்தை அணை

விருநகர் மாவட்டம் குல்லூர் சந்தை அணை பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விருதுநகர் கவுசிகா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குல்லூர் சந்தை நீர்த்தேக்கம் போதிய பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருகிறது. விருதுநகர் அருகே குல்லூர்சந்தையில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம், வடமலைகுறிச்சி கண்மாயில் வைப்பாற்றின் உபரிநீராய் வந்து சேர்ந்து கண்மாய் நிரம்பிய பின் அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் வழியாக சென்று இருக்கன்குடி அர்ச்சுனா நதியோயோடு சேரும் கவுசிகா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு விவசாய பயன்பாட்டிற்காக அன்றைய முதல்வர் எம்ஜியாரால் 1986ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. மொத்தம் 9 மீட்டர் உயரமுள்ள இந்த அணையில் இருந்து 2 பிரதான கால்வாய்கள் மூலம் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

    இதன் மூலம் செந்நெல்குடி, சூலக்கரை, மெட்டுக்குண்டு, குல்லூர்சந்தை, கல்லூமார்பட்டி, செட்டியாபட்டி ஆகிய 7 ஊர்கள் பாசன வசதி பெற்று வந்தன. சுற்றியுள்ள 2,891 ஏக்கர் விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த அணை தற்போது விருதுநகர் நகராட்சி கழிவுகளால் மாசடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்த அணையை நம்பி பாசனம் செய்து வந்த விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாக காட்சியளிக்கின்றன.

    அணையில் பாய்ந்தோடும் நீர்


    ஆகாயத்தாமரை நிரம்பி அணை


    மேலும் நீர்நிலைகள் போதிய பராமரிப்பு இன்றி ஆகாய தாமரைகள் நிறைந்தும் காணப்படுகிறது. நீர் பகுதிகளை ஆகாய தாமரைகளும், அணையின் சுற்றுப்பகுதிகளை கருவேல மரங்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குல்லூர்சந்தை மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுலா மேம்பாட்டிற்காக இதன் அருகே சிறுவர் பூங்கா ஒன்றும் திறக்கப்பட்டதாய் கூறப்படுகிறது.

    மோசமான நிலையில் அணைக்கட்டுப் பகுதி


    ஆனால் தற்போது அந்த சிறுவர் பூங்கா எங்கே போனது என்று தேடும் நிலையிலேயே உள்ளது. பிற்காலத்தில் தொல்லியல் துறையின் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக பூங்காவின் அமைவிடத்தில் ஒரு பழைய அறிவிப்பு பலகை மட்டும் காணப்படுகிறது.

    பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா


    தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இனி வரும் காலத்திலாவது அணை புதுப்பிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி