ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

தீபாவளி ஸ்பெஷல் : மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும்  விருதுநகர் கருப்பட்டி மிட்டாய்

தீபாவளி ஸ்பெஷல் : மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும்  விருதுநகர் கருப்பட்டி மிட்டாய்

தயாராகும் கருப்பட்டி மிட்டாய்

தயாராகும் கருப்பட்டி மிட்டாய்

Virudhunagar Karupatti Mittai | விருதுநகர் அருகே உள்ளது பாலவநத்தம் கிராமம். இங்கு தயாரிக்கப்படும் கருப்பட்டி மிட்டாய் உலகப்புகழ் பெற்றது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பு வகைகளும் தான் நமக்கு ஞாபகம் வரும். அந்த வகையில் விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் தயாரிக்கப்படும் கருப்பட்டி மிட்டாய் தீபாவளி ஸ்பெஷலாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  விருதுநகர் அருகே உள்ளது பாலவநத்தம் கிராமம். இங்கு தயாரிக்கப்படும் கருப்பட்டி மிட்டாய் உலகப்புகழ் பெற்றது. இது தமிழரின் பாரம்பரிய  தின்பண்ட த்தில் ஒன்றாகும்.  பொதுவாக சீரணி மிட்டாய், வெல்லம் மிட்டாய் தான்  சர்வசாதாரணமாக கிடைக்கும். ஆனால் இங்கு கருப்பட்டி மிட்டாய் மிகவும் பிரசித்தி பெற்றது. பனங்கருப்பட்டிலிருந்து கருப்பட்டி மிட்டாய் தயாரிப்பதால் அதிக சுவை கிடைக்கிறது.

  மேலும்  சீரணி மிட்டாய் உடலுக்கு ஆரோக்கியம் இல்லாததால் கருப்பட்டி மிட்டாய் அதிக அளவில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கருப்பட்டி மிட்டாய் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த கருப்பட்டி மிட்டாய் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  இதையும் படிங்க : சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை - வனத்துறை அறிவிப்பு

  தீபாவளி இன்னும் ஒருவார காலம் மட்டுமே இருப்பதால் கருப்பட்டி மிட்டாய் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. மேலும் கருப்பட்டி மிட்டாய் விற்பனையும் அதிகரித்துள்ளது.  கருப்பட்டி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. உடலுக்கு சுறுசுறுப்பு தந்து சோர்வையும் நீக்கும். மேலும் கருப்பட்டி  இதயத்திற்கு மிக நல்லது. செரிமான பிரச்சனையையும் சரி செய்கிறது. ஆகையால் கருப்பட்டி சேர்த்த கருப்பட்டி மிட்டாய் மிகவும் உடலுக்கு நல்லது என்று தெரிவிக்கின்றனர் இதை தயாரிப்பவர்கள்.

  செய்தியாளர் : கணேஷ்நாத் அய்யம்பெருமாள் - விருதுநகர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Virudhunagar