Home /News /virudhunagar /

திறந்தவெளிக் குப்பைகளால் அவதிப்படும் விருதுநகர்: நகராட்சி அதிகாரி சொல்வது என்ன?

திறந்தவெளிக் குப்பைகளால் அவதிப்படும் விருதுநகர்: நகராட்சி அதிகாரி சொல்வது என்ன?

விருதுநகர் குப்பைக் கிடங்கு

விருதுநகர் குப்பைக் கிடங்கு

விருதுநகர் நகராட்சியின் பல பகுதிகளில் குப்பைகள் சாலைகளில் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் சுற்றுப்புறம் மாசடைந்து சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. சுகாதாரம் என்பது நாட்டின் பெரும்பிரச்சனையாக உள்ளது. கிராமத்தில் திறந்த கழிப்பறை உபயோகம் மிகப்பெரிய சுகாதார பிரச்சினை என்றால் அதற்கு இணையாக நகரங்களுக்கு திறந்த வெளி குப்பைகள்.

    முன்பு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது குப்பை தொட்டிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் குப்பைகளை பொதுவெளியில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.



    இன்னும் சில இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அப்படியே திறந்த வெளியில் தீ வைத்து எரிக்கப்படுவதால் புகை மண்டலங்கள் சூழ்ந்து காற்று மாசை ஏற்படுத்துகிறது. 7 லட்சம் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட விருதுநகர் நகராட்சி பகுதியில் மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை திறந்த வெளியிலே கொட்டுகின்றனர்.

    சாலையோரக் குப்பை


    மேலும் இந்த திடக்கழிவுகள் யாவும் முறையாக கையாளப்படுவது இல்லை என்கின்றனர் பொதுமக்கள். குப்பைத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை குறைக்கலாம் என்ற ஒரு கருத்தும் பரவலாக காணப்படுகிறது.



    இது குறித்து விருதுநகர் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: மக்கள் நகராட்சி குப்பை தொட்டிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து போடுவது இல்லை. அனைத்து குப்பைகளையும் கலந்து போடுவதால் அவைகளை பிரிக்கும் செலவுகள் அதிகமாகிறது.

    தூய்மை குறித்து அரசு விழப்புணர்வு ஓவியம்


    இதனால் அனைத்து குப்பை தொட்டிகளும் எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக அனைத்து பகுதிகளிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிக்கப்படுகிறது. எனினும் ஆங்காங்கே மக்கள் திறந்த வெளியில் குப்பைகளை போடுகின்றனர். அவைகள் எல்லாம் அகற்றப்பட்டு அங்கு கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களும் வரையப்பட்டு வருகின்றனர். எனினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்றி இது வெற்றி பெறாது என்றார்.

    பயன்பாட்டில்லாமல் கிடக்கும் குப்பை அள்ளும் வாகனம்


    இதுபற்றி பொதுமக்கள் சிலர் நகராட்சியினரால் அனைத்து பகுதிகளிலும் முறையாக குப்பைகள் சேகரிக்கப்படுவது இல்லை. அதனால் தான் திறந்த வெளி குப்பைகள் சேருகின்றன என்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திடக்கழிவு மேலாண்மையை துரிதப்படுத்தி, குப்பைகளை விரைவில் அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி