ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

இதை செய்தால் உரிமம் ரத்து.. பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை..!

இதை செய்தால் உரிமம் ரத்து.. பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை..!

விருதுநகர் ஆட்சியர்

விருதுநகர் ஆட்சியர்

Collector warn fire workers | பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது தொடர்பாக, பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விதிமுறைகளுக்கு முரணாக ஆலைகளை வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டால், நிரந்தமாக உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது தொடர்பாக, பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி , ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், சட்டவிரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் பட்டாசுகள் தயாரிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

பட்டாசு ஆலைகள், உரிமை தாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் ; விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். அதிகப்படியான பணியாளர்கள், அதிகளவிலான வெடிபொருட்கள் இருப்பு வைத்தல் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

செய்தியாளர்: கணேஷ்நாத், விருதுநகர்.

First published:

Tags: Fire crackers, Local News, Virudhunagar