ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

`பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா..! - 'மழை லீவ் கேட்டவருக்கு விருதுநகர் ஆட்சியரின் நச் பதில்

`பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா..! - 'மழை லீவ் கேட்டவருக்கு விருதுநகர் ஆட்சியரின் நச் பதில்

மாவட்ட ஆட்சியர் மேக்நாதரெட்டி

மாவட்ட ஆட்சியர் மேக்நாதரெட்டி

மழை விடுமுறை தொடர்பான கேள்விக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் ஹிட்டான பாடல் வரிகளை வைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் ஆரெஞ்சு அலெர்ட் அறிவித்துள்ளது.

  மழை காலம் வந்தால் விவசாயிகள், மீனவர்கள் வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளை எதிர்நோக்கி இருந்து வந்த நிலையில், விட சமீப காலமாக மாணவர்கள் தான் விடுமுறை அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தங்கள் மாவட்டத்தின் ஆட்சியர் யார் என்பதை இந்த காலத்து மாணவர்கள் விடுமுறை அறிவிப்புக்காக வேண்டியேனும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்.

  இந்நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று இரவு முதலே விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி வந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக  செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அது உறுதியாகாத செய்தி என்பதால், அதைப் புகைப்படம் எடுத்த ட்விட்டர் வாசி ஒருவர் அம்மாவட்ட ஆட்சியர் மேக்நாத ரெட்டியை டேக் செய்து விடுமுறை உண்டா சார் என கேள்வி எழுப்பினார்.

  அதற்கு ஆட்சியர் அளித்த பதில் தான் தற்போது ட்ரென்டாகியுள்ளது. அந்த நபருக்கு ஆட்சியர் தனது ட்விட்டர் பதிவில்,

  "பாலே இங்க தேறல

  பாயாசம் கேக்குதா !!!

  Rain NO

  School YES.

  Wrong News. Sleep soon and wake up for School. Good Night "

  என பதில் அளித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் ஹிட்டான பாடல் வரிகளை வைத்து மாணவர்களுக்கே புரியும் தொனியில் மாவட்ட ஆட்சியர் சுவாரஸ்யமாகப் பதில் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: District collectors, Heavy Rains, School Holiday, Virudhunagar