Home /News /virudhunagar /

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் காரில் வந்து தங்க நகை பறிப்பு - அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் காரில் வந்து தங்க நகை பறிப்பு - அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

விருதுநகர் செயின் பறிப்பு

விருதுநகர் செயின் பறிப்பு

விருதுநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் கந்தசாமி வீட்டின் முன்பு இருசக்கர வானத்தை நிறுத்தி வீட்டுக்குள் செல்ல நின்ற போது அவரது கழுத்தில் கிடந்த 16 பவுன் நகை பறிப்பு.

    விருதுநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் கந்தசாமி என்பவர் வீட்டின் முன்பு இருசக்கர வானத்தை நிறுத்தி வீட்டுக்குள் செல்ல நின்றபோது அவரது கழுத்தில் கிடந்த 16 பவுன் நகை பறித்து காரில் வந்த மர்மநபர்கள் கைவரிசை.

    விருதுநகர் மாவட்டம்  லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி.  இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் பஜாருக்கு சென்று விட்டு மதியம் ஒரு மணிக்கு மேல் மதிய உணவுக்காக வீடு திரும்புவார். கழுத்தில் எப்பொழுது மிகப்பெரிய செயின் அணிந்திருப்பார்.  வீட்டிற்கு வந்த கந்தசாமியை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் ஒரு காரில் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.

    லட்சுமி நகர் மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டின் கேட்டை திறப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது காரில் இருந்து முகமூடி போல் துண்டை கட்டிக் கொண்டு இறங்கிய மூன்று மர்ம நபர்கள் காரில் இருந்து இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் கந்தசாமி கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை இழுத்து பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் செயினில் இருந்த டாலர் மட்டும் கந்தசாமி கையில் சிக்கியது. அப்போது  அவரது மனைவி காரில் ஏறி அமர்ந்த கொள்ளையன் ஒருவன் சட்டையை பிடித்து இழுத்தார். அதற்குள் கொள்ளையர்கள் காரில் ஏறி சென்று விட்டனர்.

    Also Read:  நிமிர்ந்து பார்த்தாலே அடிதான்.. இரவு முழுவதும் சித்ரவதை - கோவை தனியார் அறக்கட்டளை ஊழியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்

    அவர் வீட்டுக்கு பக்கத்தில் நின்றிருந்த இளைஞர்கள் உடனே இருசக்கர வாகனத்தில் காரை விரட்டி சென்றனர் கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் காரில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஊரக போலீசார் பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பட காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் விருதுநகர் செயின் பறிப்பு சம்பவத்தில் 24 மணி நேரத்தில் திருடர்களை போலீசார் கைது செய்தனர். சிவகாசியை சேர்ந்த அழகர்சாமி, விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியை சேர்ந்த தீயணைப்பு துறை அலுவலர் திருப்பதி, விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 3 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்த 16 பவுன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

    செய்தியாளர்: கணேஷ்நாத் (விருதுநகர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV, CCTV Footage, Chain Snatching, Virudhunagar

    அடுத்த செய்தி