முகப்பு /செய்தி /விருதுநகர் / தனி வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த வழக்கு: அதிமுக மகளிரணி நிர்வாகி கைது

தனி வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த வழக்கு: அதிமுக மகளிரணி நிர்வாகி கைது

பாலியல் தொழில்

பாலியல் தொழில்

Virudhunagar prostitution Case | தனியாக வீடு எடுத்து விபாச்சாரம் நடத்தி வந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பாலியல் தொழில் செய்த வழக்கில்  அதிமுக மகளிரணித் துணைத் தலைவி அவரது கணவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (42) இவரது மனைவி அமல்ராணி‌, விருதுநகர் மேற்கு மாவட்ட  அ.இ.அ.தி.மு.க. மகளிரணி துணைத்தலைவியாக உள்ளார். தம்பதியினர் விருதுநகர் பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் தொழில் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து  ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த வீட்டில்  சிவகாசியைச் சேர்ந்த ஹரிபாலகுமார்(24) மற்றும் சாத்தூர் அருகே மேட்டமலையைச் சேர்ந்த கற்பகவல்லி (29) ஆகியோர் இருந்தனர்.அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய  விசாரணையின்  போது முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர்.

இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பாலியல் தொழிலில்  ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு மாவட்ட  அ.இ.அ.தி.மு.க. மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Virudhunagar