முகப்பு /செய்தி /விருதுநகர் / மாசி மாத பௌர்ணமி.. சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

மாசி மாத பௌர்ணமி.. சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

Sathuragiri Hills | சதுரகிரி மலைக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை சார்பாக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடையும் விதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் உள்ள வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. இதில்,  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்: M.செந்தில்குமார், சிவகாசி.

First published:

Tags: Local News, Sathuragiri, Virudhunagar