Home /News /virudhunagar /

மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள்  வரி விதிக்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள்  வரி விதிக்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை

Virudhunagar BSNL Office : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரி விதித்து ஊராட்சி மன்ற  தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குமிளங்குளம் ஊராட்சியில் விருதுநகர் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகமானது மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த கட்டிடத்திற்கு வரி விதித்து ஊராட்சி மன்ற தலைவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இது விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் ஊராட்சி மன்ற தலைவர் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்  கூறுகையில்,  பிஎஸ்என்எல் மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்களுக்கு  மாநில உள்ளாட்சி நிர்வாகம் வரி விதிக்க முடியாது இது விதிகளுக்கு முரணானது என வாதிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது . இந்த  அலுவலகம் இன்னும் மத்திய அரசின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

    இதையும் படிங்க: இலவச பேருந்து திட்டம் பொருளாதார புரட்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    மத்திய அரசிற்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில ஊராட்சி நிர்வாகம் வரி விதிக்க முடியாது பிஎஸ்என்எல் நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும் மத்திய அரசிற்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படுவதால் வரி விதிக்க முடியாது. எதிர்காலத்தில் அந்த இடமோ கட்டிடமோ பிஎஸ்என்எல்,  நிர்வாகத்தில் இருந்து  கார்ப்பரேட் நிறுவனத்திற்கு பெயர் மாற்றப்பட்டால் ஊராட்சி நிர்வாகம் வரி விதிக்கலாம் என கூறி ஊராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: BSNL, Madhurai high court, Madurai, Virudhunagar

    அடுத்த செய்தி