Home /News /virudhunagar /

ஆ.ராசாவை கட்சியிலிருந்து நீக்கவும் கைது செய்யவும் வேண்டும் - முதல்வருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வேண்டுகோள்

ஆ.ராசாவை கட்சியிலிருந்து நீக்கவும் கைது செய்யவும் வேண்டும் - முதல்வருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வேண்டுகோள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ஆ.ராசா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ஆ.ராசா

சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார். மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஹிந்து மதம் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராசா, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திமுக எம்.பி., மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சித்திருந்தார்.

    இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஆ.ராசா தனது ட்விட்டர் பக்கத்தில், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார். மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.. அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.





    இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்துக்களை, ஆ.ராசா விமர்சித்து வருகிறார் எனவும் அவரை முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கி, கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் வாசிக்க: பெரியார் பெயர் கொண்ட உணவகம் சூறை - இந்து முன்னணியினர் கைது
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: A Raja, CM MK Stalin, Manusmriti

    அடுத்த செய்தி