தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தாலுகா ஆழங்கிணறைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு திருமணமாகி 2 மகள், 1 மகன் உள்ளனர். மும்பையில் தேய்ப்புக்கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் 15 வருடம் பொது சேவை செய்து வந்துள்ளார்.
மும்பையில் 2500 மரங்கள், சாலை பராமரிப்பு என பொதுசேவை செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தனது மனைவி இறக்கவே அங்கிருந்த சிலர் பூல்பாண்டியன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவரது மகனை அங்கிருந்த அதிகாரிகள் படிக்க வைத்து அவருக்கு வேலை ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர். அதன்பின் 2010ம் ஆண்டில் தமிழ்நாடு வந்தவர் திருச்செந்தூர், ராமேஸ்வரம் என பிச்சை எடுத்து பள்ளிகளுக்கு உதவி செய்து வந்துள்ளார். 400 பள்ளிகளுக்கு உதவிய அவர் சிறு சிறு கோவில்களுக்கும் உதவியுள்ளார்.
அதன் பிறகு மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரையில் காக்கை பாடினியார் மேல்நிலை பள்ளியில் கொரோனா கால கட்டத்தில் தங்கி உள்ளார். அங்கிருந்து அடுத்த கட்டமாக கொரோனா நிதியை சேகரிக்கத் தொடங்கி அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வருகை தந்த இந்த முதியவர் பூல்பாண்டியன் இருக்கண்குடி கோவில் திருவிழாவிற்கு வந்து தங்கி கோவில், வீடு, கடைகளில் பிச்சை எடுத்து ரூ 10 ஆயிரம் சேமித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் இலங்கை தமிழர்களுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இதுவரை இவர் இது போன்று ரூ 50 லட்சத்து 60 ஆயிரம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியளார் : கணேஷ்நாத் அய்யம்பெருமாள், விருதுநகர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Virudhunagar