விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் சிவகாசிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த சரவணன் அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள்கள் அஸ்வினிபிரியா 11ம் வகுப்பும், ஹேமலதா 10ம் வகுப்பும் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் இந்தியா சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சகோதரிகள் இருவரும் பங்கேற்றனர்.
16 வயதிற்குட்பட்ட பிரிவில் அஸ்வினி பிரியாவும், 15 வயதுக்குட்பட்ட பிரிவில் ஹேமலதாவும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த சகோதரிகளின் சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சிறு வயது முதல் விடா முயற்சியோடு சிலம்பம் விளையாடி வரும் சகோதரிகள் இதுவரை 120 க்கும் மேற்பட்ட மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 250 பதக்கங்களை வென்றுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டில் நேபாளில் நடந்த சர்வதேச போட்டியில் இருவரும் வெற்றி பெற்று தற்போது நடைபெற்ற போட்டிக்கு தேர்வான நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று பரிசு வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் இந்த சகோதரிகள். 5 வயதிலிருந்து சிலம்பம் கற்று வரும் தாங்கள் இந்த வெற்றியோடு மட்டுமல்லாமல் இன்னும் பல வெற்றிகளை குவித்து இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: M.செந்தில்குமார் சிவகாசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Virudhunagar