ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

9 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை.. சிவகாசியில் கொடூரம்!

9 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை.. சிவகாசியில் கொடூரம்!

மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

Sivakasi Death | சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த நபர் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi | Virudhunagar

சிவகாசி அருகே 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன்-உமய லட்சுமி தம்பதிக்கு 9 வயதில் மகளும் 7 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி உமயலட்சுமி உயிரிழந்து விட கடந்த ஆண்டு அவரது சகோதரியான ராதிகாவை மறுமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மனைவி ராதிகா குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது 9 வயது மகளான அபிநயாவிற்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

ALSO READ | ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்.. மனைவி கண்டித்ததால் ரஜினி ரசிகரின் விபரீத முடிவு!

இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: செந்தில்குமார், சிவகாசி.

First published:

Tags: Crime News, Local News, Sivakasi, Suicide, Virudhunagar