முகப்பு /செய்தி /விருதுநகர் / குடிநீர் தொட்டிக்குள் கிடந்த நாயின் சடலம்..! - மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

குடிநீர் தொட்டிக்குள் கிடந்த நாயின் சடலம்..! - மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம்

குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம்

Sivakasi dog dead body | சுத்தம் செய்யும் பணிக்காக 2 நாட்கள் குடிநீர் திறந்துவிடப்படாததால் மக்கள் அதனை யாரும் குடிக்கவில்லை என ஆறுதல் தெரிவித்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivakasi | Virudhunagar

சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நாய் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 நாட்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் நாயை கொலை செய்து இந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசி எரிந்துள்ளனர். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே ஏறி சென்ற பொதுமக்கள், நாயின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நாயின் சடலத்தை கைப்பற்றி மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் குடிநீர் தொட்டிக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக குடிநீர் தொட்டிக்குள் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: செந்தில்நாதன், சிவகாசி.

First published:

Tags: Crime News, Local News, Sivakasi, Virudhunagar