Home /News /virudhunagar /

மாணவர்களின் நலனுக்காக திட்டங்களை பின்வாங்குவது தவறில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

மாணவர்களின் நலனுக்காக திட்டங்களை பின்வாங்குவது தவறில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Sivakasi | திட்டங்களை அறிவித்துவிட்டு பின்வாங்குவது குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பள்ளி கல்வி துறையில் பின்வாங்குவது என்பது நடைபெறுவதாக கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் தலைமை பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர் பயிற்சி  நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களை தங்க வைத்து இதுபோன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ஒன்பதரை கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

    பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்குவதாக எழும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், ”பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். அதற்காக சில நேரங்களில் பின்வாங்குவது என்பது தவறில்லை. மக்களுக்காக சமூக சேவையாக செய்யும் துறைதான் பள்ளி கல்வி துறை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பின்வாங்குவது என்பது நடைபெறுகிறது” என்றார்.

    Also see... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா துவக்கம்...

    போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளது. போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கனவு விரைவில் நனவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    செய்தியாளர்: M.செந்தில்குமார்,  சிவகாசி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Drug addiction, Virdunagar

    அடுத்த செய்தி