ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ராஜபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (17-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முடங்கியார் துணை மின் நிலையம்:

தாலுகா அலுவலகம், பச்சமடம், காந்தி கலை மன்றம், ஆவாரம்பட்டி, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, ரெயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்பந்தபுரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் அய்யனார் கோவில்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம், சாத்தூர் துணை மின் நிலையங்கள்:

வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார் பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்தி நாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, டி.துலுக்கன்குறிச்சி, கங்கரக்கோட்டை ஆகிய இடங்களிள் மின் வினியோக்ம் இருக்காது.

Must Read : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

இதேபோல, கிருஷ்ணாபுரம், கீழசெல்லையாபுரம் கோவில். செல்லையாபுரம், சாணாகுளம், ஊத்துப்பட்டி, ரெட்டியப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, வெள்ளையாபுரம், அன்பின்நகரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பெத்துரெட்டியபட்டி, கரிசல்பட்டி, சாத்தூர் டவுன், மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஒ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், பெரியகொல்லபட்டி மற்றும் சின்னகொல்லப்பட்டி ஆகிய இடங்களிலும் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar