முகப்பு /செய்தி /விருதுநகர் / சாதிப் பெயரைக் கூறி திட்டிய திமுக பேரூராட்சி தலைவி? - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

சாதிப் பெயரைக் கூறி திட்டிய திமுக பேரூராட்சி தலைவி? - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

வ.புதுப்பட்டி பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர்

வ.புதுப்பட்டி பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர்

அப்போது பேரூராட்சி தலைவியின் கணவர் சாந்தாராம் ஜாதி பெயரை சொல்லி திட்டியதுடன் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் முத்து லட்சுமி என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், டெங்கு ஒழிப்பு பணியாளர் முத்துலட்சுமியை எவ்வித காரணமும் இன்றி பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மீண்டும் முத்துலட்சுமியை பணியில் அமர்த்தக் கோரி கடந்த 2ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த வத்திராயிருப்பு போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, முத்துலட்சமியை பணியில் சேர்ப்பதற்காக பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் திமுக பேரூராட்சி தலைவியிடம் பரிசீலனை செய்துவிட்டு தகவல் கொடுப்பதாக கூறி அனுப்பியுள்ளார்.

அதை நம்பிய பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக பேரூராட்சித் தலைவி சுப்புலட்சுமியிடம் கேட்பதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட முத்துலட்சுமி சென்றுள்ளார்.

அப்போது பேரூராட்சி தலைவியின் கணவர் சாந்தாராம் ஜாதி பெயரை சொல்லி திட்டியதுடன் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் சாந்தாராம் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Virudhunagar