ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை... PETTA அமைப்பினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை... PETTA அமைப்பினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

தாக்கப்படும் ஆண்டாள் கோவில் யானை

தாக்கப்படும் ஆண்டாள் கோவில் யானை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான யானையை கொடூரமாக தாக்கியவர்கள் மீதுதக்க நடவடிக்கை எடுக்க கோரி PETTA அமைப்பு சார்பாக  ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழகத்தின் முத்திரைச் சின்னமாக விளங்கக் கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம். புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த 2011ம் ஆண்டு திருக்கோஷ்டியூர் சௌமி நாராயணர் டிரஸ்ட் மூலமாக அசாம் மாநிலத்திலிருந்து யானை கொண்டுவரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யானைக்கு ஜெயமாலியாதா (பெண் யானை) என பெயர் சூட்டப்பட்டு சிறுவயதிலிருந்து  யானையை ராஜா என்ற பாகன் பராமரித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்ற இடத்தில் யானைப் பாகன் யானையை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் முகாமிலிருந்து அவர் மூலமாகவே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு யானை அழைத்து வரப்பட்டது. யானையைப் பராமரிக்க துணைப் பாகன்கள் நியமித்து பராமரித்து வருகின்றனர். தற்போது யானை ஆண்டாள் கோவில் அருகே 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் கிருஷ்ணன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

காலை பூஜைக்கு மட்டுமே அழைத்து வரப்பட்டு உடனடியாக திரும்ப அழைத்துச் செல்ல படுவதாகவும் இதனால் பக்தர்கள் யானையை தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

Also see... அந்தியூர் திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்து

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமாலியாதா தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பீட்டா அமைப்பை சேர்ந்த மனிஷ் அசார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் யானை பாகன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுங்காயம் ஏற்படுத்தியது, உள்ளிட்ட விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: M. செந்தில்குமார், சிவகாசி 

First published:

Tags: Aandal, Elephant, Petta, Virudhunagar