விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசின் திட்டங்களையும் சேவைகளையும் இருக்கும் இடத்திலிருந்தே தெரிந்து கொண்டு அதன்மூலம் பொதுமக்கள் பயனடையும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் சேவைகளையும், வெளியிடும் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் விருதுநகர் மாவட்டத்துக்கென பிரத்யேக வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அந்த வாட்ஸ்அப் எண்ணை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 9488400438 என்ற இந்த வாட்ஸ்அப் எண்னை பொது மக்கள் தங்கள் மொபைலில் பதிவு செய்து கொண்டு தேவையான அரசின் சேவைக்கான லிங்க்க்கை பெற்று பயனடையலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அத்துடன், தமிழுக்கு எண் 1ஐயும், ஆங்கிலத்திற்கு எண் 2ஐயும் அழுத்தி, அரசின் அறிவிப்புகள், நலத்திட்டங்கள், சேவைகள், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய என்று அனைத்து லிங்குகளையும் பெறலாம்.
Must Read : ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?
மேலும், இதன் மூலம் மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்தல், வாக்குச்சாவடி அமைவிடம் அறிதல், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ளுதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு, எந்த நேரத்திலும் நிலவுடமை ஆவணங்கள்- பட்டா, சிட்டா, பதிவேடு மற்றும் புலப்படம், இணையவழி சான்றிதழ் சேவை, முக்கிய உதவி எண்கள், தமிழக அரசு துறைகளின் சமூக வலைதளங்கள், இணையதள முகவரிகள் போன்ற அனைத்தையும் பெற முடியும் என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar, WhatsApp