ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

Virudhunagar District | தமிழகத்தில் முதன் முறையாக அரசு சேவைகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக வாட்ஸ்அப் எண்ணை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அரசு திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி பொதுமக்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கான ஒரு தனி வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டுள்ளது.

இந்த எண்ணை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட்டு அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர். அதன்படி, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் எண் 94884 00438. இதில் தொடர்பு கொள்ள முதலில் ஹாய் என்று பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டவுடன் தகவல் தொடர்பு சேவை என்று வரும் நிலையில் தகவல் தொடர்பு சேவை பற்றி தமிழில் விவரம் அறிய எண் 1, ஆங்கிலத்தில் விவரம் அறிய எண் 2 ஐ அழுத்தினால் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றி விவரம் தெரிய வரும். அதன் மூலம் தேவைப்படும் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதில், தொடர்ந்து சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்துடன், மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்தல், வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தெரிந்து கொள்ளுதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு நிலவுடமை ஆவணங்கள், பட்டா, சிட்டா மற்றும் இணைய வழி சான்றிதழ் சேவை, முக்கிய உதவி எண்கள், தமிழக அரசு துறைகளில் சமூக வலைதள இணையதள முகவரிகள் ஆகியவற்றை இந்த எண்ணின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Must Read : த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

தற்போது, அரசு திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வெப்சைப் மூலமாகவும் அமைச்சர்கள் தெரிவிக்கும்போதும் மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும், அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அரசு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கும் சூழலில் இந்த புதிய முயற்சியானது தொடங்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Virudhunagar, WhatsApp