ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான குடிநீர் தொட்டி.. தண்ணீர் எங்கே? தவிக்கும் விருதுநகர் மக்கள்!

பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான குடிநீர் தொட்டி.. தண்ணீர் எங்கே? தவிக்கும் விருதுநகர் மக்கள்!

காட்சிபொருளான குடிநீர் தொட்டி

காட்சிபொருளான குடிநீர் தொட்டி

ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த மையமும் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே முடங்கிவிட் டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar | Tamil Nadu

  விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தி கொடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  விருதுநகர் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து அனைத்து டவுன் பேருந்துகளும் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கான புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

  பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்கு போகும் கிராம மக்களும் இங்கு தான் வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த 2015-ம் ஆண்டு நகராட்சி நூற்றாண்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.

  Also read | வட்டி இல்லாமல் பயிர் கடன் பெறலாம்.. விருதுநகர் மாவட்ட விவசாயிகளே இதுதான் வழிமுறை..

  இந்த பேருந்து நிலையம் புனரமைக்கப்படும் போது இங்கு அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அகற்றப்பட்டு புனரமைப்பு பணி முடிந்த பின்பு மீண்டும் இங்கு நிறுவப்படும் எனதெரிவிக்கப்பட்டது.

  ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த மையமும் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே முடங்கி விட் டது. தற்போது பேருந்து நிலையத் தில் பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வழங்கும் மையம்  செயல்படாத நிலையில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

  செய்தியாளர்: கணேஷ்நாத், விருதுநகர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Virudhunagar