ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

விருதுநகரில் ஷாக் சம்பவம்.. 10-க்கும் மேற்பட்ட நாய்களை அடித்துக் கொன்ற கும்பல்!

விருதுநகரில் ஷாக் சம்பவம்.. 10-க்கும் மேற்பட்ட நாய்களை அடித்துக் கொன்ற கும்பல்!

நாய்களை கொன்ற கும்பல்

நாய்களை கொன்ற கும்பல்

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட நாய்களை அடித்துக் கொன்ற ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவர் மீது விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் நாய்களை சில வாலிபர்கள் அடித்துக் கொல்லும் வீடியோ விலங்கு நல ஆர்வலர் சுனிதா கிருஸ்டிக்கு கிடைத்தது. இந்த வீடியோ கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். போனை ஊராட்சி மன்ற தலைவி நாகலட்சுமியின் கணவர் மீனாட்சி சுந்தரம் பேசினார்.

அப்போது அந்த ஆடியோவில் பேசும் மீனாட்சி சுந்தரம்

நாய்கள் சிரங்கு மற்றும் சொறி பாதிப்பில் இருந்ததாவும்

அதனால் ஊர் பசங்கள் அடித்து கொன்றதாதவும் கூறினார்.

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளை கடிக்க வருவதாகவும்

ஒருவரை கடித்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சுனிதா கிருஸ்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் கொல்லப்படுவதாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

நாய்கள் இறப்பு குறித்து அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். சங்கரலிங்கபுரம் ஊரின் வெளிப்பகுதியில் ஓர் இடத்தில் பத்துக்கும், மேற்பட்ட நாய்களை கொன்று புதைக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

Also see...  33 வார கருவைக் கலைக்க அனுமதி கொடுத்த நீதிமன்றம்.. முக்கிய விவரங்கள்!

இதனை அடுத்து அந்த இடத்தில் தோண்டி நாய்களின் பிரேதங்களை அரசு கால்நடைதுறை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் .

உடற்கூறாய்வு செய்ததில் நாய்கள் அடித்துக் கொல்லப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்நிலைய போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மீது ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Dog, Virudhunagar