ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிவகாசியில் ஓவியப்போட்டி!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிவகாசியில் ஓவியப்போட்டி!

சிவகாசியில் ஓவியப்போட்டி

சிவகாசியில் ஓவியப்போட்டி

Virudhunagar District News : பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிவகாசியில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

நவம்பர் 14ம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சிவகாசியில் ஐந்து ரூபாய் பாடசாலை நடத்தி வரும் right club for education அமைப்பினர் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

திங்கள் முதல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 11ம் தேதி மாணவர்களுக்கு எனது கனவு உலகம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : `பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா..! - 'மழை லீவ் கேட்டவருக்கு விருதுநகர் ஆட்சியரின் நச் பதில்

இதுகுறித்து பேசிய ஆர்.சி.இ அமைப்பின் இயக்குநர் சுரேஷ் பாபு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திங்கள் முதல் கையெழுத்து போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இனி வரும் நாட்களில் மாணவர்களுக்கு நடனம் மற்றும் பாட்டு போட்டி நடத்தப்பட உள்ளது என்றும், வரும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று ராஜ ராஜ சோழன், திருமலை நாயக்கர், வரகுன பாண்டிய மன்னன், இராணி மங்கம்மாள் போன்ற மன்னர்கள் போன்று குழந்தைகள் வேடமிட்டு பேசும் வகையில் மாறுவேட போட்டி ஒன்று நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் மூலம் குழந்தைகள் நம் மன்னர்களை பற்றி தெரிந்து கொள்ள செய்யலாம் என்றும் தெரிவித்தார். மேலும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு நாள் மதுரை மீண்டும் அம்மன் கோயில் மற்றும் அதிசயம் தீம் பார்க் அழைத்து செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar