ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலை கழகம் சார்பில் திருப்பாவை பாசுரங்கள் விண்ணப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆடிப்பூர மண்டபத்தில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம், தமிழ் இசை கல்லூரியை சேர்ந்த ‘நாதம் 108' குழு சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடும் வைபவம் நடைபெற்றது. இதில் 20 மாணவர்கள், 64 மாணவிகள் என 84 பேர் சேர்ந்து வாத்தியங்கள் இசைத்து திருப்பாவை பாசுரத்தில் உள்ள 30 பாடல்கள் பாடினர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, திருப்பாவை பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து பேசிய அவர், “ஆண்டாள் சந்நிதியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடும் வாய்ப்பு கிடைத்தது சிறப்பு. அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் வகுத்த இசைக் கச்சேரி முறையை பின்பற்றி நமது குழந்தைகள் அழகாக திருப்பாவை பாடினார்கள். தேனினும் இனிய தமிழால் பாடப்பட்ட திருப்பாவை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தம் திராவிட வேதம் என போற்றப்படுகிறது. எங்கள் ஊரான ஆண்டாள் அவதரித்த பூமியில் திருப்பாவை பாடிய உங்களுக்கு துறையின் அமைச்சர் என்ற முறையில் அனைவரும் சார்பாகவும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
‘ஓங்கி உலகளந்த உத்தமன்பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்'
என்ற ஆண்டாளின் பாடலுக்கேற்ப அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என்று கூறினார்.
செய்தியாளர் : செந்தில்குமார் (சிவகாசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thangam Thennarasu, Thiruppavai