ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா - நிகழ்ச்சி நிரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா - நிகழ்ச்சி நிரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா இம்மாதம் 23ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) தொடங்கி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சூடித்தந்த சுடர்கொடி என்று போற்றப்படும் ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமியாக போற்றப்படுகிறது. இங்கிருக்கும் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 23ஆம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவருக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பிறகு பகல்பத்து மண்டபத்திற்கு செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் 2023 ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ராப்பத்து திருவிழா தொடங்குகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ராப்பத்து திருவிழாவானது 11ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நாள்தோறும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

ஜனவரி 7ஆம் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து உச்சநிகழ்ச்சியாக மார்கழி நீராட்ட எண்ணெய் காப்பு உற்சவ விழா 8ஆம் தேதி எண்ணெய் காப்பு மண்டபத்தில் தொடங்குகிறது.  இந்த விழா 15ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் முன்னின்று செய்து வருகின்றனர்.

First published:

Tags: Aandal, Local News, Margazhi, Virudhunagar