முகப்பு /செய்தி /விருதுநகர் / சதுரகிரியில் மார்கழி தரிசனம்... 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு..

சதுரகிரியில் மார்கழி தரிசனம்... 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு..

சதுரகிரி

சதுரகிரி

Virudhunagar District News : மார்கழி மாதம் பிறப்பையொட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகரியில் உள்ள சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இந்த கோயில் அடர் வனப்பகுதியில் இருப்பதாலும், சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.

இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது. கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது.

வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : செண்பக தோப்பு பகுதியில் நக்சலைட் நடமாட்டம்? யாரும் போகாதீங்க.. எச்சரிக்கும் வனத்துறை!

வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட்டு சமையல் செய்ய அனுமதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதந்தோறும் பக்தர்கள் சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுதி வழங்கப்படுகிறது.

நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

இந்நிலையில், நேற்று வானிலை காரணமாக பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்து இருந்தனர்.

சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை கேட்டின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

அதிகாரிகளிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து வனத்துறை கேட் திறக்கப்பட்டது. மார்கழி மாதம் பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Virudhunagar