ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

உடலுறவில் விபரீத முயற்சி.. டார்ச்லைட்டால் கணவன் செய்த செயலால் மனைவி உயிரிழந்த பரிதாபம்... விருதுநகரில் சம்பவம்

உடலுறவில் விபரீத முயற்சி.. டார்ச்லைட்டால் கணவன் செய்த செயலால் மனைவி உயிரிழந்த பரிதாபம்... விருதுநகரில் சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

Husband and Wife sex : உடலுறவில் கணவன் செய்த விபரீத முயற்சியால் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

உடலுறவின்போது கணவன் செய்த விபரீத முயற்சியால் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அத்திகோயில் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த வனராஜ் (50) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டவதாக ஏசுராணி என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். மேலும், ஏசுராணிக்கும் வனராஜ் 2வது கணவர் ஆவார். இவர்கள் இருவரும் முதல் திருமணத்தின்போது பிறந்த 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். வனராஜ் கான்சாபுரம் அத்திகோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவல் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இரவு மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரது மனைவியும் இருவரும் தங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வனராஜ் கூமாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர்  ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஏசுராணியின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்த செய்த கூமாப்பட்டி போலீசார் இறந்த உமாவின் கணவர் வனராஜிடம்  விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “இரவு தங்கியிருந்த இடத்தில் நானும் எனது மனைவியும் மது அருந்திவிட்டு உறவு கொண்டோம். அப்போது, என்னால் உறவு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எனது கையில் இருந்த டார்ச் லைட்டை வைத்து எனது மனைவியின் பிறப்புறுப்பில்  அழுத்தினேன். இதனால் ரத்தம் வெளியேறி எனது மனைவி இறந்து விட்டார்” என வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைகேட்டு அதிச்சியடைந்த போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து வனராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உடலுறவின்போது கணவன் செய்த விபரீத முயற்சியால் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : செந்தில்குமார் - சிவகாசி

First published:

Tags: Crime News, Local News, Virudhunagar