Home /News /virudhunagar /

விருதுநகர் அருகே பெண்ணை காரில் கடத்திசென்று பாலியல் பலாத்காரம்.. 5 பேர் கைது

விருதுநகர் அருகே பெண்ணை காரில் கடத்திசென்று பாலியல் பலாத்காரம்.. 5 பேர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Aruppukkottai | பெண்ணை காரில் கடத்திச்சென்று நகையை பறித்ததுடன் 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Aruppukkottai, India
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகருக்கு சென்றார். ஊருக்கு செல்வதற்காக விருதுநகரில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் அவருக்கு அறிமுகமான ஒருவர் வந்தார். ஊரில் இறக்கி விடுவதாக கூறி காரில் அந்த பெண்ணை ஏற்றி அழைத்து வந்தார். அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கோபாலபுரம் சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது ஒரு இடத்தில் கார் நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணும், அவரை அழைத்து வந்தவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் 7 பேர் மோட்டார் சைக்கிள், மற்றும் காரில் வந்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணையும், அவரை அழைத்து வந்தவரையும் தாக்கினர்.

    பின்னர் அந்த பெண்ணை தங்களது காரில் கடத்திச் சென்று, ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்கு கொண்டு சென்று 7 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டனர். இதற்கிடையே அந்த பெண் கடத்திச் செல்லப்படுவதை ஒருவர் பார்த்துள்ளார்.

    அவர் இதுகுறித்து  அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் செல்வதும், பின்னர் அந்த கும்பல் அதே இடத்துக்கு காரில் வந்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு செல்வதுமான காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் அந்தபெண் இருக்கிறாரா? என்பதை அறிய போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது, அங்கிருந்த 7 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயற்சித்தது. அவர்களில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். மற்ற 2 பேர் ஓடிவிட்டனர்.
    இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி இருக்கிறார். உடனே ஆஸ்பத்திரியில் இருந்து போலீசாருக்கு அதுபற்றி தகவல் அளிக்கப்பட்டது.

    அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் பிடிபட்ட5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது,  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சீனிவாசன் (வயது 42), ஜெயக்குமார் (23), ராம்கு மார் (20), அழகுமுத்து (19) மற்றும் ஒரு சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர் பாக கைது செய்யப்பட்டனர்.

    Also see... மதுரை:காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்;6 உணவகங்களுக்கு நோட்டீஸ் - உணவு பாதுகாப்பு துறை அதிரடி! 

    அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், தங்க நகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கணேஷ்நாத், அருப்புக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Aruppukkottai Constituency, Crime News, Gang rape, Virudhunagar

    அடுத்த செய்தி