ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் - எடப்பாடி பழனிசாமி

திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும், தங்கள் ஆட்சியில் தான் தமிழ்நாடு ஏற்றம் கண்டது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

  ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை தங்கள் ஆட்சி கொண்டு வந்ததாகவும், வாக்களித்த மக்களுக்கு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகிய போனஸ்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளதாகவும் விமர்சித்தார். அதிமுக மட்டுமே மக்களை மதிக்கும் கட்சி என குறிப்பிட்ட எடப்பாடி பழனசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என்றும் கூறினார்.

  Also read : ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை தடுக்க முடியாது - வானதி சீனிவாசன்

  தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தன் குடும்பத்தினர் மீது தான் கவலை என்றும், அதிமுகவில் மட்டுமே தொண்டர்களும் தலைவர் ஆகலாம் என குறிப்பிட்டார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: ADMK, All India Anna Dravida Munnetra Kazhagam‎, Edappadi Palanisami, Edappadi Palaniswami