ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

வீழ்ச்சியடைந்த கொய்யா விலை.. வேதனையில் மரத்தை எரிக்கும் விருதுநகர் விவசாயிகள்..!

வீழ்ச்சியடைந்த கொய்யா விலை.. வேதனையில் மரத்தை எரிக்கும் விருதுநகர் விவசாயிகள்..!

விவசாயி

விவசாயி

வெளி மாவட்ட கொய்யாக்கள் இங்கு விற்பனைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என விருதுநகர் விவசாயிகள் கோரிக்கை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar | Virudhunagar

  விருதுநகர் மாவட்டத்தில் கொய்யா விலை வீழ்ச்சியால்

  விவசாயிகள் வேதனையுடன் 30 வருட கொய்யா மரங்களை வெட்டியும்,  எரித்தும் வருகின்றனர்.

  விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய பகுதிகளில் கொய்யா மரங்கள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது.

  விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக கொய்யா மர சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பயிரான கொய்யாப்பழ விவசாயம் மூலம் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழக்கையை நடத்தி வருகின்றனர்.

  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாய கொள்முதலுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தற்போது  கொய்யாப்பழ விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

  விவசாய கொள்முதல் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர். ஒரு கிலோ கொய்யா பழம் கிலோ ரூபாய் 35 முதல் 40 வரை விற்ற நிலையில் கடந ஆண்டுகளாக  கொய்யா பழம் கிலோ 25 ரூபாய் மட்டுமே விற்கப்படுகிறது.

  இதையும் படிங்க | குழந்தைகள் தினம்- தீம் பார்க்கிற்கு அழைத்துச் சென்று குழந்தைகளை மகிழ்வித்த தன்னார்வ அமைப்பு

  தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா மரம் விவசாயத்திற்கு அதிக அளவில் ஊக்கப்படுத்துதலும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் வெளிமாவட்டங்களில் இருந்து கொய்யாப்பழம் அதிகளவில் மாவட்டத்திற்குள் வருவதால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு கொய்யாப்பழ கொள்முதல் விலை மிகக் குறைந்த அளவில் கிடைக்கிறது.

  இதனால் கொய்யாப்பழ வியாபாரத்தை நம்பி வாழும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதால் 30 வருட கொய்யா மரங்களை விவசாயிகள் பல ஏக்கரை வெட்டி, எரித்து அழித்து வருகின்றனர்.

  வெளிமாவட்ட கொய்யாக்கள் இங்கு விற்பனைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும், அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் மாவட்டத்தில் அரசு சார்பில் ஜூஸ் கம்பெனி  ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

  செய்தியாளர்: கணேஷ்நாத், விருதுநகர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Farmers, Guava, Virudunagar